சனிப்பெயர்ச்சி பலன்கள் (2026-2028):கடகம்
மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரிக்கும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 06.03.2026 முதல் 24.04.2028 வரையிலும் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமருகிறார் சனி பகவான். எனவே தன்னம்பிக்கை துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பழைய கடனை அடைக்க புது வழி பிறக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.
தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் மறையும். சொந்த வீடு வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்தங்கள் மெச்சும் படி கல்யாணத்தை முடிப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளி பிரச்சனைகள் தீரும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.
சனி பகவான் பார்வை பலன்கள்
சனி பகவான் உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்டபடி வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
சனி பகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் நிம்மதி தரும்.
சனி பகவான் உங்கள் லாப வீட்டை பார்ப்பதால் எதிர்பாராத பண வரவுகள் உண்டு. புது சொத்து வாங்குவீர்கள்.
பரிகாரம்
சனிக்கிழமையில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு உதவுங்கள். வசதி வாய்ப்புகள் பெருகும்.





Leave a reply