Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

சனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:ரிஷபம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:ரிஷபம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:ரிஷபம்

தவறுகளைத் தட்டிக்கேட்கும் தைரியம் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை சனி பகவான் லாப வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். மனச்சோர்வு நீங்கும்; மனதில் புதுச் சிந்தனைகள் தோன்றும். குடும்பத்தில் நிம்மதி தங்கும்.

உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். மனைவி வழியில் மதிப்பு – மரியாதை கூடும். வாரிசு இல்லாமல் தவித்த தம்பதியினருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். சகோதரர் களுடனான கசப்பு உணர்வு நீங்கும். சகோதரிக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு.

சனி பகவானின் பார்வை பலன்கள்:

சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் வீண் கோபம், அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். எனினும் அதிகக் கண்டிப்பு வேண்டாம். சிலர் பிள்ளைகளின் படிப்பு, பணியின் நிமித்தம் அவர்களைப் பிரியவேண்டி வரும்.

சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள். வாகனத்தை இயக்கும்போதும் கவனம் தேவை. குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள்.

பரிகாரம் :

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கைலாயநாதர் கோயிலில் அருளும் சனீஸ்வர பகவானை சனிக்கிழமைகளில் சென்று தரிசித்து வழிபடுங்கள் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள் எதிலும் வெற்றி கிட்டும்

About ASTROSIVA

Leave a reply