Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

சனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:மிதுனம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:மிதுனம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:மிதுனம்

எதையும் மூடிமறைத்துப் பேசத் தெரியாதவர் நீங்கள். உங்கள் ராசிக்கு, வாக்கியப் பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரையிலுமான காலத்தில், ராசிக்கு 10-ம் வீட்டில் சனி அமர்கிறார். எதிலும் நல்லதே நடக்கும். தடைப்பட்டுக்கொண்டிருந்த வேலைகளெல்லாம் முடிவுக்கு வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத்துணைவர் வழியில் ஆதரவு பெருகும்.

முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் இருந்த வீட்டிற்கு, வங்கியில் கடன் கிடைக்கும். வெகுநாட்களாகப் பேசாமல் இருந்த சகோதரர், இனி வலிய வந்து பேசுவார். குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக ஏறி இறங்கிய தம்பதியருக்கு இப்போது குழந்தைப் பாக்கியம் உண்டாகும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கோயில் விழாக்களில் முதன்மைப்படுத்தப்படுவீர்கள். அக்கம்-பக்கத்தாருடன் மனஸ்தாபங்கள் நீங்கும்.

சனிபகவானின் பார்வை பலன்கள்

சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படலாம். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றிவிட்டுப் புது வாகனம் வாங்குவீர்கள்.

சனி பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். அவருக்குக் கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து நீங்க வாய்ப்பு உண்டு.

சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுப விரயங்கள் வரக்கூடும்.

பரிகாரம் :

தேனி அருகில் உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவானே சனிக்கிழமைகளில் சென்று வணங்கி விட்டு வாருங்கள் ஏழைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள் நல்லதே நடக்கும்.

About ASTROSIVA

Leave a reply