யோனி பொருத்தம்
யோனி என்றால் பிறப்பு என்று பொருள். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மிருக குணம் உண்டு.பூனைக்கு எலி வாடை பிடிக்காது. புலிக்குப் பசு வாடை பிடிக்காது என்பது போல் மனிதருள்ளும் உள்ள மிருக பலத்தை எடுத்து இயம்புவது யோனிப் பொருத்தம்.
மனித குணங்களை 14 மிருகங்களுடன் இணைத்து சோதிட சாஸ்திரம் பலன் கூறுகிறது. அவை.
1. குதிரை,
2.யானை,
3. ஆடு,
4.பாம்பு,
5. நாய்,
6.பூனை,
7. எலி,
8.பசு,
9. எருமை,
10.புலி,
11. மான்,
12.குரங்கு,
13. கீரி,
14. சிங்கம் என்பனவாகும்.
இதில் வனவிலங்கு வீட்டு விலங்கு என்பதுவாய் அமைந்துள்ளது
கவனிக்க வேண்டும். குதிரைக்கு குதிரை (அசுபதி-சதயம்). யானைக்கு யானை (பரணி-ரேவதி) இப்படிச் சேர்ப்பது நல்லது.
குதிரைக்கு எருமை பகை. அதனால் அசுபதி, சுவாதி, ஹஸ்தம் சேராது. இப்படியே வன விலங்கு வீட்டு விலங்கு என்று பாராமல், சேரும் சேராது என்ற மிருகப் பொருத்தம் பார்ப்பது நல்லது.
பகை மிருகங்கள் உள்ள நட்சத்திரத்தைச் சேர்ப்பதால் விவாகரத்து, கருத்து வேறுபாடுகள், புத்திர பாக்கியமின்மை உண்டாகும். இப்பொருத்தம் இன்றியமையாதது.
1. அசுபதி – சதயம் : குதிரை யோனி (வீட்டு விலங்கு)
2. பரணி – ரேவதி : யானை யோனி (காட்டு விலங்கு)
3. கார்த்திகை – பூசம் : ஆடு யோனி (வீட்டு விலங்கு)
4. ரோகிணி – மிருகசீரிடம் : பாம்பு யோனி (வன விலங்கு)
5. திருவாதிரை – மூலம் : நாய் யோனி (வீட்டு விலங்கு)
6. புனர்பூசம் – ஆயில்யம் : பூனை யோனி (வீட்டு விலங்கு)
7. உத்திரம் – உத்திரட்டாதி : பசு யோனி (வீட்டு விலங்கு)
8. ஹஸ்தம் – சுவாதி : எருமை யோனி (வீட்டு விலங்கு)
9. சித்திரை – விசாகம் : புலி யோனி (காட்டு விலங்கு)
10. அனுஷம் – கேட்டை : மான் யோனி (வன விலங்கு)
12. பூராடம் – திருவோணம் : குரங்கு யோனி (வன விலங்கு)
12. உத்திராடம் : கீரி யோனி (வன விலங்கு)
13. அவிட்டம் – பூரட்டாதி : சிங்கம் யோனி (வன விலங்கு)
மேற்கண்ட நட்சத்திரங்களை ஒன்றுக்கொன்று அப்படியே சேர்க்கலாம். ஆனால்,
1. குதிரை, எருமை ஒன்றுக்கொன்று விரோதம் என்பதால், ஆண் பெண் யாராக இருந்தாலும். அசுபதி, சதயத்தோடு சுவாதி, ஹஸ்தத்தைச் சேர்க்கக் கூடாது.
2. யானை, சிங்கம் ஒன்றுக்கொன்று விரோதம் என்பதால், பரணி, ரேவதியைப் பூரட்டாதி, அவிட்டத்துடன் சேர்க்கக்கூடாது. அதாவது பரணி/அவிட்டம், பூரட்டாதி, ரேவதி/ அவிட்டம் பூரட்டாதி, இப்படியே எல்லா கிரகங்களுக்கும் சேர்க்கலாம். ஆனால், அவிட்டம், பூரட்டாதி சிம்ம இராசியுடன் சேர்க்கலாம்.
3. கார்த்திகை, பூசம் (ஆடு-குரங்கு) திருவோணம், பூராடம் சேராது. சஷ்டாஷ்டகம் வேறு.
4. ரோகிணி, மிருகசீரிஷம் முதலியவற்றுக்கு (பாம்பு), கீரியான உத்திராடமும், எலியான மகம், பூரமும் சேராது.
5. நாய் யோனிகளான திருவாதிரை, மூலத்திற்கு அனுஷம், கேட்டை சேராது. (சஷ்டாஷ்டக தோஷம்)
6. புனர்பூசம், ஆயில்யத்திற்கு (பூனைக்கு) திருவாதிரை, மூலம், மகம், பூரம் சேராது.
7. மகம், பூரத்துக்கு மிருகசீரிஷம், ரோகிணி, ஆயில்யம், புனர்பூசம் சேராது.(பாம்பு-எலி-பூனை)
8. உத்திரம், உத்திரட்டாதிக்கு (பசு) விசாகம், சித்திரை (புலி) சேராது.
மேற்கண்டவற்றைப் பார்த்துப் பழகினாலே எல்லாவற்றுக்கும் சுத்தமாகப் பொருத்தம் பார்க்க இயலும்.





Leave a reply