Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

நட்சத்திர ரகசியங்கள்:பூரட்டாதி நட்சத்திரம்

நட்சத்திர ரகசியங்கள்:பூரட்டாதி நட்சத்திரம்

பூரட்டாதி நட்சத்திரம்

மெத்த நாணத்தை பேணும் வெகுளி சொல் பேசான் வல்லன் கைத்தலம் சுமலம் ஒக்கும் கருமங்கள் பலவும் பேசும் முத்தோடு மணியும் பொன்னும் முறைமையால் அணிய வல்லான் பொத்திடும் பொய்யும் சொல்லான் பூரட்டாதி நாளினானே.

-மரண கண்டிகை

பொருள்: பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர், வாக்கு தவறாதவர். ஆடை, ஆபரணங்களில் ஆசை அதிகமுண்டு.நீச்சல் தெரிந்தவருக்கு கடலும், காலளவு தான். நீச்சல் தெரியாதவருக்கு, கடல், மரண பயத்தை உண்டாக்குகிறது. பாதை தெரிந்துவிட்டால், பயணம் சுகமாகும். வாழ்க்கையின் நிகழ்வுகளை, ஜோதிடத்தில், நட்சத்திரங்களின் மூலம், முன்கூட்டியே அறிந்துகொண்டால், ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.

Nakshatra-Secrets-Poorattadhi-Nakshatra-Characteristics-and-Benefits

பூரட்டாதி

பொதுவான குணம்: பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கல்வியிலும் பேச்சாற்றலிலும் சிறந்தவர்களாகத் திகழ்வார்கள் பிறருக்கு உதவும் எண்ணம் அதிகமிருக்கும் தர்ம சிந்தனை உடையவராக இருப்பார்கள்.

பூரட்டாதி நட்சத்திரம் (ஆண்)

குணம்: கொள்கை பிடிப்பு மென்மை யான சுபாவம், நேர்மை பேச்சாற்றல். ஞானம் சாமர்த்தியமாக காரியங்களைச் சாதித்தல்.

குடும்பம்: பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு திருமண வாழ்க்கையில் பற்றுதல் குறைவு, குடும்பத்தில் சிறு சலசலப்புகள் அல்லது தாமதமான திருமணம் போன்றவை ஏற்படலாம்.

கல்வி: கல்வியில் ஆழமான ஞானம் மற்றும் தத்துவ சிந்தனை இருக்கும்.

தொழில்: ஆலோசனை, மேலாண்மை மற்றும் வங்கித்துறை சார்ந்த வேலைகளில் சிறந்து விளங்குவார்கள் இவர்களுக்கு, உகந்த தொழில்கள் வங்கி பணி, ஆடிட்டர்,நகை கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், அரசு கருவூலத்தில் வேலை,ஆசிரியர்கள், மருத்துவ பயற்சியாளர்கள், பத்திரிக்கை துறை

திருமணப் பொருத்தம்: திருவாதிரை, சுவாதி,சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.

ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனால், புதன் தசை நடக்கும் காலத்தில், மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, ரத்த அழுத்தம், பாதங்களில் சிரமங்கள் ஏற்படாலாம்.

ராசி வடிவம் கட்டிலின் முன் கால்கள்
பாலினம் ஆண்
அதிபதி குரு
அதி தேவதை அஜ ஏகபாதர்
நிறம் மஞ்சள்
மலர்கள் முல்லை
விருட்சம் மாமரம்
அதிஷ்ட உலோகம் தங்கம்
உறுப்பு கணுக்கால் ,முழங்கால்
விலங்கு ஆண் சிங்கம்
பட்சி உள்ளான் பட்சி
அதிஷ்ட திசை கிழக்கு
கணம் மனித கணம்
பஞ்ச பூதம் ஆகாயம்

பூரட்டாதி நட்சத்திரம் (பெண்)

குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், அனைவரிடமும் அன்பாகவும், மென்மையாகவும் பழகும் இயல்புடையவர்கள். மற்றவர்களின் மனம் புண்படாதவாறு சாமர்த்திய மாகப் பேசும் திறமை கொண்ட வர்கள். இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

குடும்பம்: இந்த நட்சத் திரப் பெண்கள் தன் கணவனிடம் மிகவும் அன்பாக அக்கறை யுடன் வேலை இருப்பார்கள். சென்று கணவருக்குப் பண உதவி செய்யும் யோகம் கொண்டவர் களாகவும், குடும்பத்தை அன்புடன் பார்த்துக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.

திருமணப் பொருத்தம்:

(பூரட்டாதி: 1,2,3-கும்ப ராசி): கார்த்திகை, புனர் பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பரணி, பூசம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி நீங்கலாக, மற்ற நட்சத்திரக் காரர்களைத் திருமணம் செய்துகொள்ளலாம்.

(பூரட்டாதி: 4- மீன ராசி): கார்த்திகை, புனர் பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பரணி, சுவாதி, ரேவதி நீங்கலாக, மற்ற நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துக்கொள்ள லாம்.

ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் புதன் தசையில், ஞாபக மறதி, மன சோர்வு போன்ற கோளாறுகளால் பாதிக்கப்படுவார்.

‘பூரட்டாதி பொறான் பிறர் பொத்து சொல் நேரிட்டார் வழக்கன்பால் நெய்க்கு அன்பினான் வாரிட்டார் முலை மாதருக்கு ஈவிலான் ஓரிட்டார் கல்விமான் நாசி உன்னதன்!’

தமிழ் ஜாதகம்

பொருள்: புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர், வழக்குகளை தீர்க்கவல்லவன். உயர் கல்வி அறிவு உடையவன். பிறர் பழி சொல்லுக்கு ஆளாகதவன்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் சிறப்பு

செவ்வாய் ஹோரையும், பூரட்டாதி நட்சத்திர மும், ரிஷப லக்னமும், கூடும் நேரத்தில் பிறந்தவர்கள், சாதனை படைப்பார்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் வலிமை

சிறந்த அறிவாற்றல், பேச்சாற்றல் மற்றும் ஆன்மிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.தைரியம் மற்றும் தலைமைப் பண்பு அதிகம்.கொள்கைக்கும், அறிவிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.தொலைநோக்கு பார்வையுடன், எதிர்காலத் திட்டங்களை வகுப்பவர்கள்.ஆக்கப்பூர்வமான சிந்தனை இருக்கும்

பூரட்டாதி நட்சத்திரத்தின் பலவீனம்

முன்கோபத்தால், பகை அதிகமாகும்.முக்கியமான விஷயங்களில் முடிவு எடுக்க தயங்குவார்.

கூட்டு கிரக பலன்

(பூரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன் களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.)

  • பூரட்டாதி நட்சத்திரத்தில், சூரியனிருக்க, கல்வியில் உயர் நிலை அடைவான்.
  • செவ்வாய் அமர்ந்திருக்க, முன்கோபம் அதிகம்.
  • புதன் அமர்ந்திருக்க, நகைச்சுவை உணர்வு அதிகமுடையவர்.
  • சுக்கிரன் அமர்ந்திருக்க, விவசாயத்தில் ஆர்வம் அதிகமுடையவர்.
  • சனி அமர்ந்திருந்தால் பங்கு சந்தையில் நஷ்டம் உண்டாகும் 
  • குரு அமர்ந்திருந்தால் வாழும் ஊரில் புகழ் பெருவார் 
  • ராக அமர்ந்திருந்தால் கணிதத்தில் நிபுணராக இருப்பார் 
  • கேது அமர்ந்திருந்தால் தொழில் செய்யும் இடத்தில் தொல்லை அதிகம் இருக்கும் 

பூரட்டாதி நட்சத்திர பாத பலன் 

பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ நவாம்சம் செவ்வாயால் ஆளப்படுகிறது போராட்ட குணம் அதிகம் இருக்கும். 

பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம் ரிஷப நவாம்சம் சுக்கிர பகவானால் ஆளப்படுகிறது தொழிலில் ஆதாயம் குறைவு .

பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் மிதுன நவாம்சம் புதனால் ஆளப்படுகிறது இந்த பாதத்தில் பிறந்தவர்கள் பண்டிதர், புகழ்பெற்றவர்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் நான்காவது பாதம் கடக நவாம்சம் சந்திரனால் ஆளப்படுகிறது இந்த பாதத்தில் பிறந்தவர் புதிய முயற்சிகளில் ஆர்வம் உள்ளவர். 

பூரட்டாதி நட்சத்திர நாளில் செய்யத் தகுந்த சுப காரியங்கள் 

நாமகரணம் சீமந்தம் உபநயனம், புதிய ஆடை வாங்குதல், ஆரம்பக் கல்வியை தொடங்குதல் போன்றவை செய்யலாம்.

பூரட்டாதி நட்சத்திர நாளில் செய்யக்கூடாதவை 

ஆனி மாதமும் பூரட்டாதி நட்சத்திரமும் கூடினால் சுப காரியங்கள் செய்யக்கூடாது. 

பலன் தரும் பரிகாரம் 

வியாழக்கிழமை திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜம்புகேஸ்வரரை வழிபடுவது பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.

About ASTROSIVA

Leave a reply