பராபவ வருட பஞ்சாங்கம்
பராபவ வருஷத்திய பலன் வெண்பா
“மிக்கபராபவத்தன் மேதினியிற்பின் மழையாம்
தக்கபசுக்கடழைக்குமேஇக்குப்
பலிக்கா துநான்குவகைப் பல்லுயிர்க்குமின்பம்
கலிக்காதெனவே கருது.”
பாடலின் பொருள்
பராபவ வருடத்தின் முற்பகுதியைவிட பிற்பகுதியில் அதிக அளவில் மழை பசுமாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் பொழிவு இருக்கும். → ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனால் பால் உற்பத்தியும் அதிகரிக்கும். உலலை உள்ள மக்கள் மட்டுமல்லாது அனைத்து உயிர்களும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள். அதே நேரத்தில் அவர்கள் சவால்களையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
மழை மேகம்
பராபவ வருஷத்தின் மழை மேகம் காளமேகம். தென்மேற்கு பகுதியில் மேகம் உற்பத்தியாகி தூணி மழை பெய்யும். தூறலும் காற்றும் அதிகம் இருக்கும். தேவமானத்தால் 100 யோஜனை அகலமும் நீளமுள்ள மரக்கால் அளவிலான இந்த வருடத்து மழை 20 மரக்கால் அளவில் பெய்யும் இதில் 4 பங்கு பூமியிலும் 6 பங்கு மலைகள் மற்றும் காடுகளிலும் 10 பங்கு சமுத்திரத்திலும் பெய்யும்.
சாலிவகான சகாப்த வருடத்தை கொண்டு என்ன மேகம் என்று கணக்கிடப்படுகிறது. மேகம் உற்பத்தியாகும் இடம், எந்த திசை, என்பதை அந்த வருடம் வரக்கூடியமேகாதிபதி எந்த கிரகம் என்பதை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. மழை அளவு அந்த ஆண்டு ராஜா என்ன கிரகமோ அதை கொண்டு கணக்கிடப்படுகிறது. ஒரு மரக்கால் என்ற அளவு நூறு யோஜனை நீளமும், நூறு யோஜனை அகலமும் நூறு யோஜனை ஆழமும் கொண்டதாகும். ஒரு யோஜனை தூரம் என்பது சுமார் 8 கி.மீட்டர் அளவு என்று பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்போட்டம்
மார்கழி மாதத்தில் பூராட நட்சத்திரம் முதல் பாதத்தில் சூரியன் பிரவேசிப்பது முதல் உத்திராட நட்சத்திரம் முதல் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் வரை உள்ள நாட்கள் காபோட்ட நாட்கள்.
மேலும் ஆனி மாதத்திற்கு 1 நாள் 30 நாழிகை, ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை ஒவ்வொரு மாதத்திற்கும் 2 நாள் 15 நாழிகை, மார்கழி மாதத்திற்கு 1 நாள் என மொத்தம் 13 நாள் 15 நாழிகை கர்போட்ட காலம் ஆகும். கர்போட்ட காலத்தில் வானவில், மேகமூட்டம் ஏற்பட்டால் அந்த மாதங்களில் நல்ல மழை பெய்யும். இவை இல்லாமல் வானம் சுத்தமாக இருந்தால் மழை குறைவு என்பதாகும்.





Leave a reply