Share
செவ்வாய் தோஷம் என்றால் என்ன ? அதற்க்கு சரியான பரிகாரம் சொல்லவும் ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
செவ்வாய் தோஷம்
அண்டவெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக சொல்வது என்றால் வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையை கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது. சனி நரம்பு மண்டலத்தையும், புதன் சுவாசத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதேபோன்று செவ்வாய் கிரகம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களையும், எலும்பு தாதுக்களையும் ஆட்சி செய்கிறது.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும், அப்படி குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளை பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் சரியாக இராது.
இதுதான் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பே தவிர, மற்றபடி மணமக்கள் பிரிந்து விடுவார்கள், இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகள் ஆகும். கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டும் செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாமல் இருந்தும் கூட அவர்கள் பல காலம் நல்ல விதத்தில் இணைபிரியாமல் குடும்பம் நடத்துவதை பார்த்திருக்கிறேன்.
பொதுவாக லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என கருதப்படுகிறது. ஆனால் இது பொதுவான கணக்கே தவிர சரியான கணக்கு அல்ல. செவ்வாய் மேஷம், விருச்சகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும், மகர ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும், கடக ராசியில் நீசம் பெற்று இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
இது தவிர குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து இருந்தாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது மேற்குறிப்பிட்ட கிரகங்கள் செவ்வாயை பார்த்தாலோ செவ்வாய் தோஷம் கண்டிப்பாக கிடையாது. அதேநேரம் செவ்வாயின் நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், குரு ஆகியவற்றின் ராசிகளான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் என்பதே கிடையாது.
இந்த கணக்குகளின் அடிப்படையில் பார்க்கும்போது ஆயிரத்தில் ஒருவருக்கு தான் செவ்வாய் தோஷம் உண்டு. மற்றவர்கள் அதை நினைத்து பயப்படுவது வீண் கற்பனையாகும். ரத்த சம்பந்தப்பட்ட தோஷம் என்பதால் பரிகாரம் செய்வதால் எந்த பயனும் இல்லை.
Leave an answer