Please briefly explain why you feel this answer should be reported.
Report
Cancel
ஒவ்வொருவருக்கும் மூன்று அல்லது நான்கு முறை ஏழரை சனி வரும். ஒரு ராசியைக் கடக்க சனி எடுத்துக்கொள்ளும் காலம் இரண்டரை வருடங்கள். பன்னிரண்டு ராசியையும் ஒருமுறை வலம் வர சனிக்கு 30 வருடங்களாகும்.
அவரவர் ராசிக்கு முன் வீடான 12ஆம் இடத்தில் இரண்டரை வருடங்களும், ராசியில் சனி உள்ள இரண்டரை வருடங்களும், ராசிக்கு அடுத்த வீடான 2ஆம் இடத்தில் சனி உள்ள இரண்டரை வருடங்களும் சேர்த்து மொத்தம் ஏழரை வருடக் காலத்தை ஏழரை நாட்டுச் சனி என்கிறோம்.
முதல் சுற்று ஏழரைச் சனியை மங்கு சனி என்றும், இரண்டாவது சுற்று ஏழரைச் சனியைப் பொங்கு சனி என்றும், மூன்றாவது சுற்று ஏழரைச் சனியை மாரக சனி என்றும் கூறுவர்.
முதல் சுற்று சிறிய வயதில் வரும்போது உடல்நலக் குறைவு, கல்வித் தடை, தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், தாய்-தந்தையரிடையே பிரிவு, குடும்பத்தில் குழப்பம் போன்ற தீய விளைவுகள் ஏற்பட வாய்ப் புண்டு.
மத்திம வயதில் இரண்டாவது சுற்றான பொங்கு சனி நடைபெறும் போது திருமணம் நடக்கும், நல்ல வேலை கிடைக்கும், வாழ்க்கை செட் டில் ஆகிவிடும். மூன்றாவது சுற்றில் சிலருக்குக் கடுமையான உடல் உபாதைகள் ஏற்படவும், தொழிலில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புண்டு. குழந்தைப் பருவத்தில் முதல் சுற்று வந்தால் 90 வயது வரை வாழ்ந்து நான்காவது சுற்று ஏழரைச் சனியில் மரணம் சம்பவிக்கும்.
Answer ( 1 )