Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

ஐஸ்வர்யம் பொங்க: செல்வம், சுகம் பெருக்கும் சிறந்த வழிகள்!

ஐஸ்வர்யம் பொங்க: செல்வம், சுகம் பெருக்கும் சிறந்த வழிகள்!

செல்வம் மற்றும் சகல ஐஸ்வரியங்களின் கடவுள் மகாலட்சுமி. இந்த தேவியின் அனுக்கிரகங்களை பெற வீட்டில் சில நல்ல நடத்தைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் தேவி மகிழ்ந்து எல்லா வளங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை.

அந்த நல்ல பழக்கவழக்கங்கள் என்னன்னு தெரியுமா?

  • சூரிய உதயத்திற்கு முன்னால் விழித்து படுக்கையில் இருந்து எழுந்து விடுங்கள்.
  • இரவில் வீட்டை பெருக்கி குப்பைகளை வெளியே வாரி வீசக்கூடாது.
  • கர்ப்பிணிகள் தேங்காய் உடைத்தல் ஆகாது.
  • உணவுப் பொருட்களை கையால் வாரி பரிமாறக்கூடாது.
  • மாலை நேரத்தில் படுக்கக் கூடாது, அப்போது வயிறு நிறைய உணவு உண்ணக்கூடாது.
  • பெண்கள் கவிழ்ந்து கிடந்து தூங்க கூடாது.
  • திருமணம் ஆன பெண்களின் நெற்றியில் எப்போதும் போட்டு இருக்க வேண்டும்.
  • வீட்டில் விருந்தினர்கள் இருக்கும்போது அவர்களுக்கு உணவு வழங்கும் முன்பே வீட்டில் உள்ளவர்கள் உணவு சாப்பிடக்கூடாது.
  • வடக்கே தலை வைத்து தூங்க கூடாது.
  • இரண்டு கைகளாலும் தலையை சொரிய கூடாது.
  • பெண்கள் பூசணிக்காயை உடைத்தல் ஆகாது.
  • உணவினை உருட்டி உண்ணக்கூடாது அப்படியே எடுத்து உண்ண வேண்டும்.
  • நகம், முள், ரத்தம், மண்கட்டி போன்றவற்றால் நிலத்தில் கோடு போடக்கூடாது.
  • சூரியன் உதிக்கும் போதும் அஸ்தமிக்கும்போதும் அதனை பார்ப்பது ஆகாது.
  • தீபம், பூஜைமணி,தர்பம் நவரத்தினங்களை தரையில் வைக்க கூடாது.
  • அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டு விமர்சித்துக் கொண்டும் இருக்கக் கூடாது.
  • எச்சில் கையால் தலையை தொடக்கூடாது.
  • பெண்களை அவமானப்படுத்தவும், மோசமாக சித்தரிக்கவும் கூடாது.
  • அடுத்தவர்களின் பொருள்களை அபகரிப்பது ஆகவே ஆகாது.
  • ஆண்கள் வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
  • கடவுளை விமர்சிக்க கூடாது.

About ASTROSIVA

Leave a reply