சூரியன் சந்திரன் இணைவு கடக லக்னம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தரும் ?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

சூரியன் சந்திரன் இணைவு: சுபத் தன்மையுடன் இந்த இணைவு இருந்தால் வாக்கு வசிகரமாக அமையும். பணத்தட்டுபாடின்றி இருப்பர், குடும்ப மேன்மை காண்பர். புத்தி கூர்மை மிக்கவராக இருப்பர். இவர்களின் சிந்தனை திறன் வெகு வேகமாக அமையும். ஞாபக சக்தி மிக்கவர்கள். அரசு சார்ந்து மிக ஆதாயம் பெறுவர். தாய் தந்தையாரின் ஆசீர்வாதம் பெற்றவர்கள்.

சூரியன் சந்திரன் இணைவு : இந்த அமைப்பு அசுப வகையில் அமைந்திருந்தால் திக்குவாய் அல்லது ஒற்றை கண் இருக்கும். பல் நீண்டிருக்கும் புத்தி தடுமாற்றம் உண்டு. குடும்பம் எனும் அமைப்பு சரியாக இராது. ஞாபக மறதி நிலை இருக்கும். இவரது பெற்றோர் ஒருவருக்கொருவர் எதிரி மனப்பான்மையுடன் நடந்து கொள்வார். அரசு வகை சிரமம் தொடர்ந்து இருக்கும். நீரில் கண்ட முண்டு.

பரிகாரம்: திங்கள்கிழமை தோறும் சிவனுக்கு பால், தயிர், இளநீர், அபிஷேகம் செய்வது நல்லது. வயதானவர்களுக்கு கண் கண்ணாடி தானம் செய்யவும்.

Leave an answer

Browse