வாஸ்து பூஜை செய்யும் நேரம் மரணயோகமாக இருந்தால் செய்யலாமா? மரணயோகம், கரிநாள், எமகண்டம் போன்ற காலங்களில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்கிறார்களே?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Answer ( 1 )

  1. 2025-12-23T17:30:14+00:00

    Please briefly explain why you feel this answer should be reported.

    Report
    Cancel

    சுப காரியங்கள் வேறு வாஸ்து காரியங்கள் வேறு. ஒவ்வொரு விதிக்கும் விதிவிலக்குகள் உண்டு. வாஸ்து பூஜை என்பது வீடு கட்டுவதற்கும், கடைகால் போடுவது, நிலை வைப்பது போன்ற செயல்களை செய்வதற்குமான காலம்.

    அந்தக் காலம் மரணயோகமாக இருந்தாலும், கரி நாளாக இருந்தாலும், ராகு காலமாக இருந்தாலும் செய்யலாம். தடையில்லை வாஸ்து நேரத்துக்கு நட்சத்திர தோஷம் திதி தோஷம் போன்ற எந்த தோஷமும் இல்லை.

    வாஸ்து நேரம் பார்த்து விட்டால் மற்ற விஷயங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை அது கிரக ஆரம்பம் செய்வதற்கு மட்டுமே உரியது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் அந்த நேரத்தில் வேறு சுப காரியங்களை செய்யக்கூடாது.

Leave an answer

Browse