Share
வாமனருக்குத் தனி கோயில் உள்ளதா? எங்கு? எந்த வகையான பிரார்த்தனை அல்லது பரிகாரத்துக்கு அந்தப் பெருமாளை வழிபட வேண்டும்?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
திருக்கோவிலூர், காஞ்சிபுரம், தாளாளன் கோயில் (சீர்காழி அருகில்),
ஸ்ரீரங்கம் அரங்கநாதப் பெருமாள் கோயில், திருநீர்மலை அரங்கநாத
பெருமாள் கோயில் ஆகிய தலங்களில் வாமன அவதாரப் பெருமாளைத்
தரிசிக்கலாம். இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் சபுடமஸ்ய
பாகும்ஸுரேசு என்று சொல்லி இவரை வழிபட வேண்டும். அந்தணர்
குலத்தில் பெருமாள் எடுத்த ஒரே அவதாரம் வாமன அவதாரம். யுத்தமும்
ரத்தமும் இன்றி எதிரியை, புத்திசாலித்தனத்தால் வென்ற பெருமாள்
இவர். பூணூல் கல்யாணம் என்னும் உபநயனம் நடைபெறும்போது
வாமன அவதாரக் கதையை, சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்ய
வேண்டும். இந்தப் பெருமாளை வேண்டிக்கொண்டால் வழக்குகள்
விரைவில் தீர்ப்பாகும். குடும்பச் சண்டைகள் தீரும். ஜாதகத்தில் சுக்ரன்
நீச்சமாக உள்ளவர்கள் வாமன பெருமாளை வழிபட்டால் நல்லது.
Leave an answer