Share
நீண்ட காலமாகத் திருமணம் தாமதமானால் என்ன பரிகாரம் செய்யலாம்?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Answer ( 1 )
Please briefly explain why you feel this answer should be reported.
திருவிடைக்கழி சென்று குரா மரத்தடியில் உலாவிய முருகனை வழிபட்டால் ராகு-கேது தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
முருகனை ராகு வழிபட்ட தலம் திருவிடைக்கழி. அங்கு தல விருட்சம் குரா. இதை வேகமாகச் சொன்னால் ராகு ராகு என்று ஒலிக்கும். பஞ்ச மூர்த்திகளும் சுப்ரமண்ய சொரூபமாகத் திகழும் அபூர்வ ஸ்தலம் இது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இத்தலத்துக்கு, பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார்.
சேந்தனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடி வழிபட்ட தலம். திருக்கடையூரிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. குறை உள்ளவர்கள் இத்தலத்துக்குச் சென்று முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.