Share
ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்என்று சொல்கின்றனர். அப்படி என்றால் என்ன?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
ஜாதகத்தில் ஏழாம் இடம் என்பது அவரவர் வாழ்க்கைத் துணைஅமைவதை உணர்த்தும் இடம். இதை, ‘களத்திர ஸ்தானம்’ என்பார்கள் லக்னத்துக்கு ஏழாம் இடமாக வரும் கட்டம் காலியாக இருந்தால் அதுசுத்தமாக இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். இது தவறான கருத்து.ஏழாம் இடம் காலியாக இருப்பது வேறு, சுத்தமாக இருப்பது வேறு.ஏழாம் இடத்துக்கு அதிபதியாக வரும் கிரகம் நவாம்சத்தில் நீச்சம் அடையாமல் இருப்பது, ஏழுக்குடையவன் பாபகிரகங்களின் பார்வையும் சேர்க்கையும் இன்றி வலுவாக விளங்குவது, ஏழாம் இடத்தைப் பாபகிரகங்கள் பார்க்காமல் இருப்பது, போன்ற பல்வேறு கிரக அமைப்புகளைக் கொண்டே ஏழாம் இடம் சுத்தமாக இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் ஏழாம் இடத்தில் இருந்தாலும் சில லக்னங்களுக்கு களத்திர தோஷம் உண்டாகும்.
ஏழாம் இடம் காலியாக உள்ள சிலருக்குக் கூட விவாகரத்து ஏற்படுகிறது.
ஏழாம் இடம் சுத்தம் என்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்
என்று அர்த்தம்.
Leave an answer