குரு பார்வை
மேஷ ராசி
மேஷ ராசியை குருபகவான் பார்க்க அதிக வேலைக்காரர்களையும், பெரிய செல்வத்திற்கு சொந்தக்காரனாகவும், மன்னனின் மந்திரியாகவோ, சேனைத்தலைவனாகவோ இருப்பான்.
ரிஷப ராசி
ரிஷப ராசியை குருபகவான் பார்க்க நிலைத்த புதல்வர்களோடும், மனைவியோடும், சுற்றத்தோடும் கூடியவனாகவும், அன்னை மற்றும் தந்தையிடம் பக்தி கொண்டவனாகவும், அதிக நிபுணத்தன்மை கொண்டவனாகவும், மிகவும் பிரபலமானவராகவும் விளங்குவான்.
மிதுன ராசி
மிதுன ராசியை குருபகவான் பார்க்க எல்லாவிதமான வித்தைகளையும் கற்றவனாகவும், சாஸ்திரங்களை உபதேசிப்பவனாகவும், பிரசித்தி பெற்றவனாகவும், உண்மையைப் பேசுகின்றவனாகவும், அழகு உடையவனாகவும், எல்லாவற்றிலும் கவுரவிக்கப்பட்டவனாகவும், யோக்கியனாகவும், நல்ல வாக்கு வன்மை கொண்டவனாகவும் விளங்குவான்.
கடக ராசி
கடக ராசியை குருபகவான் பார்க்க மன்னனாகவோ, மன்னனுக்கு சமமான குணங்களைக் கொண்டவனாகவும், பணிவு ,பராக்கிரமம், நயம் இவற்றோடு கூடியவனாகவும், நல்ல மனைவியோடு சுகம் அனுபவிப்பவனாகவும் இருப்பான்.
சிம்ம ராசி
சிம்ம ராசியில் அமர்ந்த சந்திரனை குருபகவான் பார்க்க சிறந்த வம்ச பாரம்பரியத்தை கொண்டவனாகவும், அதிக சாஸ்திரங்களில் பயிற்சி செய்தவனாகவும், புகழ்பெற்றவனாகவும், அதிக நற்குணங்களை கொண்டவனாகவும், மன்னனுக்கு சமமானவராகவும் இருப்பான்.
கன்னி ராசி
கன்னி ராசியை குருபகவான் பார்க்க சுற்றத்தினர், நண்பர் இவர்களோடு கூடியவனாகவும், சுகம் அனுபவிப்பவனாகவும், மன்னனின் காரியங்களை செய்பவனாகவும், வாக்கியங்களை உணர்ந்தவனாகவும், செல்வந்தனாகவும், இருப்பான்.
துலாம் ராசி
துலாம் ராசியை குருபகவான் பார்க்க எங்கும் போற்றப்படுபவன், கிரய, விக்கிரகங்களில் திறமை கொண்டவனாகவும், ரத்தினம் முதலிய கற்களாலும், பாத்திரங்கள் இவற்றின் வியாபாரத்தில் சிறந்தவனாகவும் இருப்பான்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசியை குருபகவான் பார்க்க சக்தி பொருந்தியவனாகவும், ஜனங்களால் விலக்கப்பட்டவனாகவும், செல்வந்தனாகவும், அழகுடையவனாகவும் இருப்பான்.
தனுசு ராசி
தனுசு ராசியை குருபகவான் பார்க்க இணையிலா உடல்வாகு கொண்டவனாகவும், மன்னனின் மந்திரியாகவும், தனம், தர்மம், சுகம் இவற்றோடு கூடியவனாகவும் இருப்பான்.
மகர ராசி
மகர ராசியை குருபகவான் பார்க்க அதிக புகழ் கொண்டவனாகவும், மன்னனாகவும், மன்னனுக்கு துல்லியமான குணங்களைக் கொண்டவனாகவும், அதிக மனைவி, புத்திரர்கள், சுற்றம் இவற்றோடு விளங்குபவனாகவும் இருப்பான்.
கும்ப ராசி
கும்ப ராசியை குருபகவான் பார்க்க கிராமங்கள், ஆலயங்கள், மரங்கள், உயர்ந்த வீடுகள் இவற்றிலிருந்து செல்வத்தையும், உத்தம பெண்கள் மூலம் சுகத்தையும் அனுபவிப்பவனாகவும், போற்றுதலுக்கு உரியவனாகவும் இருப்பான்.
மீன ராசி
மீன ராசியை குருபகவான் பார்க்க அன்பு நிறைந்த குணங்கள் கொண்டவனாகவும், மண்டலத்தின் அதிபதியாகவும், மிகப் பெரிய பிரபுவாகவும், அதிக அழகை கொண்டவனாகவும், அதிக பெண்களோடு கூடியவனாகவும் இருப்பான்.





Leave a reply