Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

வெற்றியைத் தரும் ஹோரைகள் எது ?

வெற்றியைத் தரும் ஹோரைகள் எது ?

வெற்றியைத் தரும் ஹோரைகள்

கிழமைகள் ஓரைகள்

ஞாயிறு: சூரியன், புதன், குரு, சந்திரன்

திங்கள்:

திங்கள்: சந்திரன், குரு, சூரியன்

செவ்வாய்: குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்

புதன்: சுக்கிரன், புதன், சூரியன்

வியாழன்: குரு, சனி, சந்திரன், சூரியன்

வெள்ளி: சுக்கிரன், புதன்

சனி: குரு, சுக்கிரன், புதன்

வெற்றியைத் தரும் ஹோரைகள்

பிறந்த ஹோரை பலன்

  • ஒருவன் எந்த ஓரை நடக்கும்போது பிறந்தாரோ அதுவே அவரின் ஜென்ம ஒரையாகும்!
  • பிறந்த ஓரை கிரகம் அவருக்கு எப்போதும் நன்மையே செய்யும்!
  • பிறப்பு ஓரை கிரகத்தின் நட்பு கிரக ஓரைகளும் நன்மை செய்யும். 
  • பகை ஓரை கிரகங்கள் தீமை செய்யும்.
  • பிறந்த ஓரை கிரக சுபாவகுனம் அச்சாதகரிடத்தில் காணப்படும்.
  • ஒருவர் வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணிக்கு பிறந்தால் அப்போது நடக்கும் புதன் ஓரையே அவரது பிறப்பு ஒரையாகும். எனவே, புதன் அவருக்கு சுபத்தையே செய்யும்.

சிறப்பு விதிகள்:

  • யாவருக்கும் “ஜென்ம லக்னாதிபதியான” கிரகத்தின் ஓரை எப்போதும் நன்மையே செய்யும்! மேலும் இந்த லக்னாதிபதியின் ஹோரையில் எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி உறுதி! பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல!
  • யோகி, இந்து லக்னாதிபதியாக வருகின்ற கிரக ஓரைகளும் சுபத்தையே செய்யும்!
  • ஜாதகத்தில் சுபபலம், சுபசாரம் பெற்று நல்ல நிலையில் இருக்கின்ற கிரக ஓரையும் எப்போதும் சுபத்தையே செய்யும்!
  • லக்னத்தின் 6, 18, 12, பாதகாதிபதிகள் ஓரை நன்மை செய்யாது!
  • நீச்சம், அஸ்தமனம், பகை, வக்கிரம் பெற்ற கிரக ஓரைகள் சுபத்தை செய்யாது!
  • தசா புத்தியாக எந்த கிரகமோ! அந்த கிரகங்களின் ஹோரையில், அந்த தசாபுத்தி பலன் நடைமுறைக்கு வருவதை அனுபவத்தில் காணலாம்.(உதாரணமாக சூரிய தசை புதன் புத்தி எனில் சூரியன் மற்றும் புதன் ஓரைகளில் பலன்களை எதிர்பார்க்கலாம்! இது நன்மை செய்யும் தசாபுத்தி எனில் நன்மை! தீமை தரும் தசாபுத்தி எனில் அந்த கிழமை, ஓரைகளில் எச்சரிக்கையாக இருந்திடலாம்!)
  • சூரிய தசா/புத்தி நடப்பவர்களுக்கு சூரிய ஓரைகளில் தான் பலன் (+/-)கள் நடக்கும்.
  • சந்திரன் தசா/புத்தி நடப்பில் உள்ளவர்களுக்கு சந்திர ஓரையில் தான் பலன்கள் நடக்கும்.
  • இதே போல மற்ற கிரக தசாபுத்திகளில் அந்த கிரக ஓரைகளில் அதன் பலன்கள் நடைமுறைக்கு வரும்!
  • ராகு தசா/புத்தியில் ராகு நின்ற ராசியாதிபதி கிரக ஓரையிலும் பலன் தரும்!
  • கேது தசா/புத்தியில் கேது நின்ற ராசியதிபதியின் கிரக ஓரையிலும் பலன் தரும்!
  • பிறப்பு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், ராகு, கேது சேர்க்கை பெற்றிருப்பின் சூரியன், சந்திரன் ஓரைகள் சரியாக பலன் தராது!

ஹோரை அறிந்து நடப்பவன் எதிலும் வெற்றிபெறுவன் என்பது சித்தர் வாக்கு

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

சுப ஹோரையை எவ்வாறு அறிந்துகொள்வது

சுப ஹோரையை அறிந்துகொள்ள எளிய வழிகள். நாள் நட்சத்திரம் பார்ப்பது போலவே சுபஹோரையில் செய்யும் செயல்களும் ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடிக்க, நமக்கு பெரிதும் உதவிடும்.இதைப் பற்றி அறிந்துகொள்ள ஜோதிடப் புலமையோ, பெரிய அளிவிலான நிபுணத்துவமோ தேவையில்லை. சாதாரணமாக தேதி காலண்டரைப் பார்த்தே இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். 

இதற்கு, பஞ்சாங்கமோ,ஜோதிட நூல்களோ தேவையில்லை. இது மணியை வைத்து ஜோதிடம் கூறும் முறை. ஒரு நாளின் 24 மணியில் ஒவ்வொரு மணிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செலுத்தும்.நவக்கிரகங்களில் ராகு, கேது என்ற சாய கிரகங்களுக்கு இதில் இடமில்லை. ஆக

மீதமிருக்கும் சப்த (ஏழு) கிரகங்கள் மட்டுமே மாறி மாறி தொடர்ச்சியாக தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. 

1. சூரியன், 2. சந்திரன், 3. செவ்வாய், 4. புதன், 5. வியாழன், 6. வெள்ளி,

7. சனி ஆகிய ஏழு கிரகங்களும் தங்களுக்குள் முறையான ஒரு அலைவரிசையில் மாறிமாறி ஆதிக்கம் செலுத்துகின்றன.

வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி ஆகும். அவை,

ஞாயிற்றுக்கிழமைக்கு சூரியன் அதிபதி, 

திங்கள்கிழமைக்கு சந்திரன் அதிபதி

செவ்வாய்க் கிழமைக்கு செவ்வாய் அதிபதி, 

புதன் கிழமைக்கு அதிபதி புதன்,

வியாழக்கிழமைக்கு அதிபதி குரு, 

வெள்ளிக் கிழமைக்கு அதிபதி சுக்கிரன்,

சனிக்கிழமைக்கு அதிபதி சனி கிரகம் ஆகும். 

ஒரு நாளின் அதிபதியாக வருகின்ற அந்த கிரகமே அந்த நாளின் முதல் ஹோரைக்கு அதிபதி. இது சூரிய உதயத்திலிருந்து முதல்

ஒரு மணிநேரமே முதல் ஹோரை. அதிலிருந்து ஒவ்வொரு மணிநேரமும் ஒரு ஹோரையாகக் கருதப்படும்.(உதாரணமாக, வியாழக்கிழமை அன்று முதல் ஹோரைக்கு அதிபதி குரு. இரண்டாவது ஹோரையின் அதிபதியை கணக்கிட வியாழக்கிழமைக்கு முந்தைய நாளான புதன்கிழமையை விடுத்து, அதற்கும் முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் கிரகம்தான் வியாழக் கிழமையின் இரண்டாவது ஹோரைக்கு அதிபதி. அடுத்து செவ்வாய்க் கிழமைக்கு முந்தைய நாள் திங்கள் கிழமையை விடுத்து, அதற்கும் முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையின் அதிபதியான சூரியன்தான் முன்றாவது. ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் சனிக்கிழமையை விடுத்து, அடுத்து வரும் வெள்ளிக்கிழமையின் அதிபதியான சுக்கிரன்தான் நான்காவது. வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாளான வியாழக்கிழமையை விடுத்து, அடுத்துவரும் புதன்கிழமையின் அதிபதியான புதன்தான் ஐந்தாவது. புதன்கிழமைக்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமையை விடுத்து, அடுத்து வரும் திங்கள்கிழமையின் அதிபதியான சந்திரன்தான் ஆறாவது. திங்கள்கிழமைக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையை விடுத்து, அடுத்து வரும். சனிக்கிழமையின் அதிபதியான சனிதான் ஏழாவது ஹோரை.

அப்படிப் பார்க்கும்போது 1. குரு 2. செவ்வாய், 3. சூரியன், 4. சுக்கிரன், 5. புதன், 6.சந்திரன், 7. சனி ஹோரை என்று வரும். 8-வது மணி முதல் மீண்டும் குரு ஹோரை துவங்கும். 

இப்படி தொடர்ச்சியாக வந்து மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் ஹோரையாக சுக்கிர ஹோரையே வரும். இப்படி வருவதில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஹோரைகள் சுப பலன்களைத் தரக்கூடியதாகும். சூரியன் மத்திம பலனை தரவல்லதாகவும் சனி, செவ்வாய் தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும் அமையும். 

ஒரு காரியத்தை செய்யத் துவங்கும் நாம் சுபகிரக ஹோரைகளில் ஆரம்பித்தால் அந்தக் காரியம் நமக்கு காரிய சித்தியைக் கொடுக்கும். 

அசுப கிரஹ ஹோரைகளில் ஆரம்பித்தால், அந்த காரியத்தில் தடை ஏற்பட்டு தோல்வியைச் சந்திக்கநேரிடும்.

About ASTROSIVA

Leave a reply