தாமத திருமணம் யாருக்கு நடக்கும் ?

ஆணின் திருமண வயதும் பெண்ணின் திருமண வயதும் கடந்த 10-20 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து விட்டது எனலாம். எதற்கு பல சமூக காரணங்கள் இருக்கின்றன. நாம் இப்பொழுது அதற்குள் போக வேண்டியது இல்லை.

எனினும், ஒரு சிலருக்கு மட்டும் மிகவும் தாமதமாக தான் திருமணம் நடக்கிறது. இது ஏன்?

12 வீடுகளில் திருமணத்தைக் குறிக்கும் முக்கியமான வீடு ஏழாம் வீடாகும். அடுத்து, குடும்பத்தைக் குறிக்கும் இரண்டாம் வீடும் திருமணத்திற்கு முக்கியம் எனலாம். அடுத்து எட்டாம் வீட்டையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

தாமத திருமணம்

ஒரு ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சனி இருந்தால் திருமணம் தாமதப்படும். சனி என்றாலே மந்தன், என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே திருமணம் தாமதப்படுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை, அல்லவா?

பொதுவாக ஒரு ஜாதகத்தில் 2, 7, 8 ஆகிய வீடுகளில் சனி, செவ்வாய், ராகு,கேதுக்கள் இருந்தால் திருமணம் தாமதப்படும். மேலே சொன்ன வீடுகளுக்கு இந்த பாவ கிரகங்களின் பார்வை இருந்தாலும் திருமணம் தாமதம் ஆகும். இந்த வீடுகளில் அமாவாசை சந்திரன் அல்லது சூரியன் இருந்தாலும் ஓரளவுக்கு தோஷம் என்றே சொல்ல வேண்டும்.

அதே போல் சந்திரனுக்கு இரண்டு, ஏழு, எட்டு ஆகிய வீடுகளில் ராகு, கேது, சனி செவ்வாய் ஆகிய பாப கிரகங்கள் நின்றாலும் அல்லது அந்த வீடுகளை அந்த பாப கிரகங்கள் பார்த்தாலும் திருமணம் தாமதப்படும் எனலாம்.

பொதுவாக மேலே சொன்ன ஜாதக அமைப்பு உடையவர்களுக்கு, திருமணம் 28 வயதிற்கு மேல் தான் ஆகிறது. ஒரு சிலருக்கு 28 வயதிற்கு முன் திருமணமாகி அவர்களின் திருமண வாழ்க்கை பிரச்சனையாகி விடுகிறது. அனேகமாக இவர்களுக்கு அவ யோக தசைகள் நடப்பில் இருக்கும்.

எனவே, இந்த மாதிரி ஜாதக அமைப்பு இருந்தால் 28 வயதிற்கு மேல் திருமணம் செய்வது சிறப்பு.

மேலே சொன்ன அமைப்புடன், புத்திர பாவம் எனப்படும் ஐந்தாம் வீடும், 5 ஆம் அதிபதியும், புத்திர காரகன் குருவும் பாதிக்கப்பட்டால் 35 வயதுக்கு மேல் தான் திருமணம் ஆகிறது.

அது சரி, இதற்கு நிவாரணம் அல்லது நிவர்த்தி உண்டா?

உண்டு.

மேலே சொன்ன பாப கிரகங்களுக்கு, இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், பாவிகளோடு சேராத புதன் ஆகியோரின் தொடர்பு ஏற்படும் போது தோஷம் நிவர்த்தி அடைகிறது எனலாம். குறிப்பாக, குரு இந்தப் பாப கிரகங்களைப் பார்த்துவிட்டால் அவர்களின் திருமணம் தாமதம் ஆவது இல்லை.

மேலே சொன்னவை எல்லாம் பொதுப் பலன்கள் தான். மற்ற கிரக நிலைகள் பொருத்துப் பலன்கள் மாறக்கூடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top