எந்த ஹோரையில் என்ன செய்யலாம் ?

சூரிய ஹோரை

உத்தியோகத்தில் சேர்தல், பத்திரங்கள் மற்றும் உயில் எழுதுதல், சிபாரிசு செய்தல் போன்றவற்றை சூரிய ஹோரையில் செய்வது சிறப்பு. ஆனால் இந்த ஹோரையில் பயணம் தொடங்குதல், புது வீடு குடி புகுதல் கூடாது.

சந்திர ஹோரை

வியாபாரம் தொடங்குதல், யாத்திரை செல்லுதல், வெளிநாடு புறப்படுதல் ஆகியவற்றை இந்த ஹோரையில் மேற்கொள்ளலாம். தேய்பிறை நாட்களில் இந்த ஹோரையில் சுப காரியங்களை விலக்கவும்.

செவ்வாய் ஹோரை

மருத்துவமனை பணிகள், அறுவை சிகிச்சை, மருந்து அருந்துதல் ஆகியவற்றுக்கு உகந்த ஹோரை இது. ஆனால் செவ்வாய் ஹோரையில் சுப காரியங்களை தவிர்க்க வேண்டும்.

புதன் ஹோரை

வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களை அணுகுதல், கதை-கட்டுரைகள் எழுதுதல், ஜாதகம் பார்த்தல், புது கணக்கு தொடங்குதல், நிலம் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது.

ஹோரை

குரு ஹோரை

இந்த ஹோரையில் எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மை பயக்கும். இந்த ஹோரை வேளையில் முகூர்த்தம் அமைவது உத்தமம். ஆடை -ஆபரணங்கள் வாங்குதல், திருமாங்கல்யத்திற்கு பொன் வாங்க, நகைக்கடை துவக்க, பெரிய தொழில்கள் செய்ய உகந்த ஹோரை இது.

சுக்கிர ஹோரை

திருமணம் சம்பந்தமான செயல்கள் தொடங்குதல், சாந்தி முகூர்த்தம், ஆடை-ஆபரணம் அணிதல், அழகுப்பொருள்கள், ஆடை வியாபாரம் தொடங்குதல், சுப நிகழ்ச்சிகள், விருந்து அளித்தல், புதிய வாகனங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது.

சனி ஹோரை

நிலம், வீடு-மனை வாங்க விற்க முயற்சிக்கலாம். இரும்பு சாமான்கள் வாங்குதலும் நலம் சேர்க்கும். ஆனால் இந்த ஹோரையில் பிரயாணம், மருத்துவமனை செல்லுதலை தவிர்க்க வேண்டும்.

சுப ஹோரையில் அஷ்டமி, நவமி, மரணயோகம், பிரபலரிஷ்ட யோகம் ஆகியவற்றை பார்க்க வேண்டாம் என்பார்கள்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top