வசு பஞ்சக தோஷம்
அவிட்டம் நட்சத்திரத்தின் அதிதேவதை வசுவாகும். அவிட்டம் நட்சத்திரம் முதல் ரேவதி வரையுள்ள ஐந்து நட்சத்திரங்களும் வசு பஞ்சக நட்சத்திரங்களாகும். இந்த ஐந்து நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் மரணம் ஏற்பட்டால் வசு பஞ்சக தோஷம் ஏற்படும். இதன் பலன் மரணம் ஏற்பட்ட
அதே வருடத்தில் அந்த குடும்பத்தில் தொடர்ந்து ஐந்து மரணங்கள்
ஏற்படும்.

அவிட்டம் – ஒரு மரணம்
சதயம் – இரண்டு மரணங்கள்
பூரட்டாதி – மூன்று மரணங்கள்
உத்திரட்டாதி – நான்கு மரணங்கள்
ரேவதி – ஐந்து மரணங்கள்
மரணம் ஏற்படவில்லை என்றால் மரணத்திற்கு ஒப்பான கண்டம் ஏற்படும்.
பரிகாரம் :-
மேற்கண்ட நட்சத்திரங்கள் நடப்பில் உள்ள நாட்களில் மரணம் ஏற்பட்டால் பிணத்தை சூரிய அஸ்தமனம் ஆவதற்கு முன்னர் எரித்து விட வேண்டும். பிணத்தை எரிக்கும்போது தர்ப்பை, அருகம் புல் ஆகியவற்றில் ஐந்து பொம்மை உருவங்கள் செய்து அவற்றை கொள்ளி வைப்பவா் கையால் சிதையில் தனித்தனியாக வைத்து எரிக்க வேண்டும். மரணம் எற்பட்ட 15 நாட்கள் கழித்து வீட்டில் மிருத்யுஞ்ஜெய ஹோமம் செய்ய வேண்டும். கொள்ளி வைத்தவர் ஒரு வருடத்திற்கு தான் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று, வில்வ இலைகளால் சிவனை அா்சிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வசு பஞ்சக தோஷம் விலகும்.