Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

நீங்கள் பிறந்த நட்சத்திரம் கர்மா நட்சத்திரமா ? கர்மா நட்சத்திரத்தில் பிறந்தால் பரிகாரம் என்ன ?

நீங்கள் பிறந்த நட்சத்திரம் கர்மா நட்சத்திரமா ? கர்மா நட்சத்திரத்தில் பிறந்தால் பரிகாரம் என்ன ?

வான் வெளியில் இருக்கும் கோடான கோடி நட்சத்திரங்களில், இவ்வுலகில் வாழும் நம் வாழ்க்கையை பாதிக்கும் 27 நட்சத்திரங்களை மட்டுமே நாம் ஜோதிடத்தில் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.

மேஷ ராசியில் முதல் நட்சத்திரமாக அஸ்வினி வரும். பின், பரணி, கிருத்திகை, ரோஹிணி, மிருகசீரிடம், திருவாதிரை புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் , அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி உத்திரட்டாதி,ரேவதி என்று மீன ராசியில் முடியும்.

27 நட்சத்திரங்களில் 14 நட்சத்திரங்கள் கர்ம நட்சத்திரங்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த கர்ம நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், போன பிறவிகளில் செய்த கர்மா கடனை அடைக்கப் பிறந்தவர்கள் என்பதால், இந்த பிறவியில் போராட்டங்கள் இருக்கும் என்று சொல்லலாம். அதாவது கடின உழைப்பு போட்டு போராடி வெற்றி பெற வேண்டியதிருக்கும்.

கர்ம நட்சத்திரங்கள் எவை?

மேஷ ராசியில் அஸ்வினியும், ரிஷபத்தில் மிருகசீரிடமும், மிதுனத்தில் திருவாதிரையும், கடகத்தில் ஆயில்யமும், சிம்ம ராசியில் பூரமும், கன்னியில் அஸ்தமும், துலா ராசியில் சித்திரையும், விருச்சிகத்தில் அனுஷமும், தனுசு ராசியிலுள்ள மூலம், பூராடம் உத்திராடம் ஆகிய எல்லா நட்சத்திரங்களும், மகர ராசியிலுள்ள அவிட்டமும், கும்ப ராசியில் பூரட்டாதியும், மீனத்தில் உள்ள உத்திரட்டாதி நட்சத்திரமும் கர்ம நட்சத்திரங்களாகும்.

அதாவது உலகில் வாழும் இரண்டு பேரில் ஒருவர் கர்மா நட்சத்திரத்தில் தான் பிறந்திருப்பார். எனவே, கர்ம நட்சத்திரத்தில் பிறந்ததற்காக அச்சப்படத் தேவையில்லை. கர்ம நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.

 கர்மா நட்சத்திர

ஜாதகம் வலிமையாய் இருந்து, 20 வயது முதல் 60 வயது வரை நல்ல தசைகள் நடக்கும் என்றால் கவலைப்பட ஒன்றுமில்லை. வாழ்க்கை போராட்டமாக இருப்பவர்கள், அமாவாசை அன்றோ, வைதிருதி அல்லது வியாதிபாத யோகம் நடக்கும் அன்றோ அன்னதானம் செய்யலாம். அல்லது ஒரு மரம் நட்டு, உங்கள் கையால் தண்ணீர் விட்டு மரத்தை வளர்க்கலாம்.

யார், யார் என்ன மரம் வளர்க்கலாம்?

அஸ்வினிமுந்திரி மரம்
மிருக சீரிடம்தென்னை
திருவாதிரைவாழை
ஆயில்யம்முருங்கை
பூரம்எலுமிச்சை
அஸ்தம்ஆரஞ்சு
சித்திரைபப்பாளி
அனுஷம்பனை
மூலம்கொய்யா
பூராடம்வெள்ளேரிக்காய்
உத்திராடம்பலா
அவிட்டம்ஆப்பில்
பூரட்டாதிமாமரம்
உத்திரட்டாதிஅன்னாசி

About ASTROSIVA

Leave a reply