Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

சிவராஜ யோகம் என்றால் என்ன ? ஜாதகத்தில் அது எப்படிபட்ட பலன்களை வழங்கும்?

சிவராஜ யோகம் என்றால் என்ன ? ஜாதகத்தில் அது எப்படிபட்ட பலன்களை வழங்கும்?

ஜோதிட சாஸ்திரத்தில் சுமார் 3500 யோகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 250 யோங்களை முக்கிய யோகங்கள் என்று சொல்ல வேண்டும். அவற்றிலும் குறிப்பாக சுமார் 10 யோகங்கள் இன்றைய சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படுகின்றன என்று சொல்லலாம்.

அவற்றில் ஒரு யோகம் தான் இந்த ‘சிவராஜ யோகம்’ ஆகும்.
ராஜயோகம் என்றால் ராஜாவைப் போல் வாழும் யோகம் என்று பொருள் கொள்ளலாம். சிவன் தான் பிரதானமான கடவுள். இதிலிருந்தே சிவராஜ யோகத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

சிவராஜ யோகம் என்பது குருவையும், அரச கிரகமான சூரியனையும் வைத்து சொல்லும் யோகம் ஆகும். குரு, சூரியனோடு சேர்ந்தாலும் அல்லது குரு சூரியனைப் பார்த்தாலும் இந்த யோகம் ஏற்படும். குரு சூரியனோடு சேர்வதை விட, சூரியனைப் பார்ப்பது சிறப்பான சிவராஜ யோகத்தைத் தரும். அதிலும் குறிப்பாக, குருவும், சூரியனும் சம சப்தமாக ஒருவருக்கொருவர் ஏழாம் பார்வையாக பார்ப்பது மிகவும் சிறப்பு.

சிவராஜ யோகம்

சிவராஜ யோகத்தால் ஏற்படும் பலன்கள் என்ன?

ஜாதகர் ஒரு அரசனைப் போல் நிறைந்த செல்வம், செல்வாக்கு, புகழ் என்று சகல சௌபாக்கியங்களையும் சூரிய தசையில் அல்லது குரு தசையில் அனுபவிப்பார்.
சிவராஜ யோகம், குரு அணி லக்கினங்களான மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்கினங்களுக்கு அதிக நற்பலன்களைக் கொடுக்கும் எனலாம்.அதிலும் குறிப்பாக சூரியனோ அல்லது குருவோ, ஆட்சி, உச்சம் பெற்று இந்த யோகம் பெறுவது கூடுதல் சிறப்பு.

கடக லக்கின ஜாதகருக்கு, மேஷத்தில் சூரியன் இருக்க, குரு துலாம் ராசியில் இருப்பது நல்ல சிவராஜ யோகம் தான். குரு சுக்கிரனின் பகை வீட்டில் இருந்தாலும் இந்த யோகம் நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆட்சி சூரியன் சிம்மத்தில் இருக்க, குரு பகை வீடான கும்பத்தில் இருந்தாலும் நல்ல சிவராஜ யோகம் என்றே சொல்ல வேண்டும்.

அதே போல் உச்ச குரு கடகத்தில் இருக்க, சூரியன் மகரத்தில் பகை பெற்று நின்றாலும் நல்ல யோகம் தான். குரு மீனத்தில் ஆட்சி பெற, சூரியன் கன்னியில் இருப்பது அதை விட சிறப்பான யோகம் என்று சொல்ல வேண்டும். அதே போல் ஆட்சி பலத்துடன் குரு தனுசில் இருக்க, சூரியன் மிதுனத்தில் இருப்பதும் சிறப்பான யோகம் தான்.

சிம்ம லக்கினத்திற்கு சூரியன் ஒன்பதில் உச்சம் பெற, 5 ஆம் வீடான தனுசில் ஆட்சி பலத்துடன் நின்று, 5 ஆம் பார்வையாக சூரியனைப் பார்க்கும் போதும் சிறப்பான சிவராஜ யோகம் ஏற்படும்.

இதைப் படித்து விட்டு சிலர் எனக்கு சிவ ராஜ யோகம் இருந்தும் எந்த நற்பலனும் பெரிதாக ஏற்படவில்லை என்று சொல்லலாம்.பொதுவாக, சுக்கிர அணி லக்கினங்களுக்கு சிவராஜ யோகம் கொஞ்சம் குறைவான அளவிலேயே நற்பலன்களைத் தருகிறது. மேலும் மற்ற கிரக நிலைகளையும் பார்க்க வேண்டும்.

குரு சூரியனோடு மிகவும் அருகில் நெருங்கி அஸ்தங்கம் ஆகி இருக்கக் கூடாது. சுமார் பத்து டிகிரிக்கு மேல் விலகி இருந்தால் சிறப்பு எனலாம்.
குருவோடு, சனி அல்லது ராகு சேர்ந்தாலோ அல்லது குருவை சனி பார்த்தாலோ யோகம் குறையும். அதுபோல் சூரியனோடு செவ்வாய், ராகு அல்லது சனி நெருங்கி சேர்ந்தாலோ, அல்லது சனி சூரியனைப் பார்த்தாலோ யோக பலன்கள் குறையும்.

மேலும் குறிப்பாக சூரிய தசை அல்லது குரு தசை நல்ல வயதில் வர வேண்டும்.
சிவராஜ யோகம் பெண்களை விட ஆண்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. குருவும் சூரியனும் ஆண் கிரகங்கள் என்பதால் ஆண்களுக்கு அதிக அளவில் சிவராஜ யோகம் வேலை செய்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

About ASTROSIVA

Leave a reply