கஜகேசரி யோகம்
சந்திரனுக்கு கேந்திரத்தில் 1,4,7,10 ஆகிய இடங்களில் குரு நிற்க கஜகேசரி யோகம் ஏற்படுகிறது. இப்படி அமையப்பெற்ற ஜாதகருக்கு எந்த தோஷங்கள் இருந்தாலும் தோஷங்கள் நசிந்து போகும்.
- உயர்ந்த பதவி ,தலைமை பதவி
- அரசாங்க அரசியல் தலைவர் பதவி கிடைக்கும்.
- மனோ தைரியம், கம்பீரமான வாக்கு, பராக்கிரமம் ஏற்படும்.
- ஆயுள் பலம் உண்டு. பெரிய அரசியல் தலைவர்களுக்கு இந்த ஜாதக அமைப்பு உண்டு.
- சந்திரனுக்கு 6 ,7 ,8 ஆகிய இடங்களில் குரு இருந்தால் சந்திராதி யோகம் எனப்படும். நோய் நொடியின்றி நீண்ட ஆயுளை பெறுவதோடு, வீரத்தோடு பகைவரை அடக்கி வெல்லும் திறமை பெற்றவராக இருக்கக்கூடிய அமைப்பு உண்டு.