காற்று ராசி
நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசியும் காற்று ராசிகளாகும்.
நீர் ராசி
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள் ( ஜல ராசிகள்) ஆகும் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் மிகுந்தவர்கள் இதை Fruitful Sings என்றும் சொல்லுவார்கள். ஜல ராசி பத்தாவது வீடாக வந்தால் தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். குளிர்பானங்கள், துணிமணி சம்மந்தப்பட்ட தொழில், கப்பல் சம்பந்தப்பட்ட தொழில் ஆகியவற்றில் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள்.