சந்நியாசி
தசம ஸ்தானா பதியுடனே
சார்ந்து கிரகம் மூன்றிருந்தால்
விசனத் தாழ்ந்து இல்லறத்தை
வெறுத்தே துறவி யாவானே!
இசைவா யிரண்டு கோள்கூடில்
இகத்தில் சீர்கே டாவானே
அசையா தோர்கோள் கூடியிடில்
அன்பாய் ஞானி ஆவானே!
– ஜம்பு மகரிஷி
பொருள் :
பத்தாமிடத்து அதிபதியுடன் மூன்று கிரகங்கள் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகன் உலக வாழ்க்கையில் விரக்தியுற்று, இல்லறத்தின்மீது வெறுப்படைந்து சந்நியாசி யாவான்.
பத்தாமிடத்ததிபதியுடன் இரண்டு கிரகங்கள் சேர்ந் திருந்தால் அவன் உலகியல் வாழ்வின் இயல்புக்கு மாறானவனாய்ச் சீர்கேடுகள் அடைவான்.
ஒரே ஒரு கிரகம் மட்டும் பத்துக்குடையவனோடு சேர்ந்திருந்தால், அந்த ஜாதகன் ஞானியாவான்.
குறிப்பு :

இந்த ஜாதகம் கௌதம புத்தருடையதாகும். கடக இலக்கினம். பத்துக்குடையவன் செவ்வாய் மூன்றுக்கு மேற்பட்ட கிரகங்களுடன் பத்தாமிடத்திலேயே உள்ளது. இவர் இல்லறத்தை வெறுத்துத் துறவு மேற்கொண்டது உலகறிந்த வரலாறு.
இந்தப் பாடலில் சொல்லப்பட்டிருப்பது பொதுவான பலன்தான். பத்துக்குடையவனோடு சேர்ந்த கிரகங்களின் தன்மையைக் கொண்டுதான் பலனை நிர்ணயிக்க வேண்டும்.