ஏழரை சனி
நிகழும் சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் ஆரம்பமாகிறது. அதேபோல் மீனம், கும்பம், தனுசு, சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்கள் முறையே ஜென்ம சனி, பாத சனி, அர்த்தாஷ்டமச்சனி, அஷ்டமத்து சனி, கண்டகச் சனி ஆகிய பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இந்த பாதிப்புகள் நீங்கி நலம் பெற்றிட அஷ்ட பைரவரை தரிசித்து வணங்க வேண்டும்.
சனிக்கிழமைகளில் பைரவர் திருத்தலங்களுக்கு சென்று பைரவ சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களும் விலகும். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், பால் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், மிளகு மற்றும் சீரகம் கலந்த சாதம் ஆகியவை பைரவருக்கு உகந்த நைவேத்தியங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து பைரவரை வழிபடுவது விஷேஷம்.
ஒரு சனிக்கிழமை அன்று அஷ்டபைரவர் ஷேத்திரத்தை தரிசித்து வந்த பிறகு தொடர்ந்து அடுத்து 6 சனிக்கிழமைகளில் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வைரவருக்கு மிளகு தீபமும், சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமும் ஏற்றி வணங்குவது நல்லது.