இராசி பொருத்தம்
பெண் ஜென்ம இராசிக்கு ஆண் ஜென்ம இராசி 1,7,9,10, 11 ஆகிய இராசிகளாய் அமைந்தால் சேரும். எடுத்துக்காட்டாக, பெண் மேஷ இராசியானால் ஆண் மேஷம், துலாம், தனுசு, மகரம், கும்பம்.
இராசியானால் சேரும். பெண் இராசிக்கு ஆண் இராசி 2,5,6,8 ஆவது இராசியானால் சேராது. 6-8 ஆம் வீடுகள் சஷ்டாங்கம் (சஷ்ட்-6,அட்டாங்கம்-8 : சஷ்ட்டாங்கம்) ஆனால் சேராது.
மேஷ இராசிக்கு எட்டாவது இராசி விருச்சிகம். மேஷம், விருச்சிகம் இரண்டுமே செவ்வாய் வீடுகள் என்பதால் சஷ்ட்டாங்க தோஷம் இல்லை. அதே போல், துலாம் இராசிக்கு எட்டாவது இராசி ரிஷபம் (துலாம்-ரிஷபம்) இரண்டுமே சுக்கிரன் வீடு என்பதால் சஷ்ட்டாங்க தோஷம் இல்லை.
அதே போல் விருச்சிகத்துககு ஆறாவது இராசி மேஷம். ரிஷபத்துக்கு ஆறாவது இராசி துலாம். எனவே சஷ்டாஷ்டகம் தோஷம் இல்லை. இரண்டுமே செவ்வாய் – சுக்கிரன் வீடு என்பதால் தோஷம் இல்லை.
பொதுவாக நடைமுறையில் பார்த்ததில், கேந்திர வீடுகளான மிதுனம் – கன்னி இராசியில் பெண்-ஆண் ஜாதகம் அமைந்தால் (எடுத்துக்காட்டாக, பெண் மிருகசீரிடம், ஆண் ஹஸ்தம் நட்சத்திரம் என்றால்) மணவாழ்வு சுகமாய் இருப்பதில்லை. மாறாக, பிரிவு உண்டாகி விடுகிறது. அதிக அழுத்த வசியம் இதற்குக் காரணம்.
அதே போல் தனுசு – மீன இராசியில் பெண்-ஆண் பொருத்தம் அமைந்தால் வருமானம் குறைந்து வறுமையில் வாட நேருகிறது.





Leave a reply