சுக்கிர தசை
சுக்கிர தசை என்றதுமே எல்லோருக்கும் பணம், பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் என்று எண்ணம் தோன்றும். ஆனால் சுய ஜாதக அமைப்பு மற்றும் குறிப்பிட்ட லக்னத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். சுக்கிரனுக்கு பகை.
இவர்களுக்கு 2 மற்றும் 7ம் இடத்துக்கு உரியவர் சுக்கிரன். ஆக மத்திம பலன்கள் உண்டாகும் எனலாம். பண வரவு உண்டு என்றாலும் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படலாம். குறிப்பாக ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுய ஜாத சாதகம் எனில் நன்மைகள் உண்டாகும். முன்கோபம் சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவது ஆகியவற்றை தவிர்க்கவும்.
பரிகாரம்
குடும்பத்துடன் ஒருமுறை திருவெள்ளியங்குடி சென்று பெருமாளுக்கு துளசி சாத்தி வழிபட்டு வரலாம். வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வணங்குவது சிறப்பு.