திருமண பொருத்தம் பார்க்கும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் !

திருமண பொருத்தம்

வெறும் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யக்கூடாது. ஜாதக பொருத்தமும், யோகமும் வேண்டும். யோகம் இல்லா ஜாதகம் உடையவரை மணந்து விட்டால் எத்தனை பொருத்தங்கள் இருந்தாலும் சரி வராது. ஜாதக யோகம் மிக முக்கியம்.

ஒருவருக்கு 7ம் இடம் பாபக் கிரகங்கள் இருந்தால் மற்றவருக்கு பாபக் கிரகம் இருக்க வேண்டும், அல்லது பாபக் கிரக பார்வை வேண்டும். ஆக கண்டிப்பாக பாபக் கிரகம் 7ம் இடம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, பார்வை மட்டும் கூட போதுமானது.

மூலம் 1ம் பாதம் மட்டும் மாமனாருக்கு ஆகாது. மற்ற மூலம் 2,3,4 பாதங்கள் தோஷம் இல்லை. ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் மட்டும் 4 பாதங்களும் தோஷம். இந்த தோஷம் பெண் ஜாதகத்திற்கு மட்டுமே. ஆண் ஜாதகத்திற்கு அல்ல. சந்திரனாவர் குரு அல்லது சுக்கிரனோடு சேர்ந்தாலும், குருவால் பார்க்கப்பட்டாலும் மூல நட்சத்திர தோஷம் கிடையாது.

ஆயில்யம் 1ம் பாதம் மட்டும் மாமியாருக்கு ஆகாது. மற்ற ஆயில்யம் 2,3,4 பாதங்கள் தோஷமில்லை.இதுவும் பெண் ஜாதகத்திற்கு மட்டும்தான்.

விசாகம் 4ம் பாதம் மட்டும் மைத்துனருக்கு ஆகாது. மற்ற விசாகம் 1,2,3 பாதங்கள் தோஷம் இல்லை. இதுவும் பெண் ஜாதகத்திற்கு மட்டும்தான்.

கேட்டை 1ம் பாதம் மட்டும் மூத்த மைத்துனருக்கு ஆகாது. மற்ற கேட்டை 2,3,4 பாதங்கள் தோஷம் இல்லை. இதுவும் பெண் ஜாதகத்திற்கு மட்டும்தான்.

திருமண பொருத்தம்

எந்த நட்சத்திர தோஷமும் ஆண் ஜாதகத்திற்கு கிடையாது. மேலும் சந்திரன் குரு அல்லது சுக்கிரனோடு சேர்ந்தாலும், குருவால் பார்க்கப்பட்டாலும் பெண்ணுக்கு கூட மூலம், ஆயில்யம், விசாகம், கேட்டை நட்சத்திர தோஷங்கள் கிடையாது. இந்த விஷயம் தெரியாமல் சில பெரியோர்களும் பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்க செய்கின்றனர். இது இளைய சமுதாயத்திற்கு செய்யும் பெரிய பாவமாகும். ஆகவே பொதுமக்களும், ஜோதிடர்களும் இவ்விஷயங்களில் அனாவசிய குழப்பம் செய்து பெண்கள் வாழ்க்கையை பாழ்படுத்த வேண்டாம்.

திருமணமாகாத பெண்களை வீட்டின் வடமேற்கு அறையில் கிழக்கே தலை வைத்த படுத்தால் வாஸ்து சாஸ்திரப்படி விரைவில் திருமணம் நடக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top