Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

தர்ம கர்மாதிபதி யோகம் யாருக்கு சிறப்பான பலன் தரும்?

தர்ம கர்மாதிபதி யோகம் யாருக்கு சிறப்பான பலன் தரும்?

முதலில் ‘தர்ம கர்மாதிபதி யோகம்’ என்றால் என்ன? என்பதை தெரிந்துக் கொள்வோம்.

ஒரு ஜாதகத்தில் ஏதாவது ஒரு ராசியில் பாக்கியாதிபதி என்னும் 9 ஆம் அதிபதியும், ஜீவன/ கர்ம ஸ்தானாதிபதி என்னும் 10 ஆம் அதிபதியும் சேர்க்கை பெறுவது தர்ம கர்மாதிபதி யோகம் ஆகும்.மேலே சொன்ன இருவரும் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றாலும் தர்ம கர்மாதிபதி யோகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பலன்?

ஜாதகர் நல்ல வழிகளில், அதாவது, நல்ல தொழில் அல்லது உத்தியோகம் மூலம் நிறைய பணம் ஈட்டுவார். தர்ம காரியங்களுக்கு செலவு செய்வார். நாலு பேருக்கு உதவி செய்வார் எனலாம்.

தர்ம கர்மாதிபதி யோகம்

எந்த லக்கினம், மற்றும் எந்த வீட்டில் சேர்க்கை ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்துப் பலன்கள் கூடக் குறைய இருக்கும்.பொதுவாக 10 ஆம் வீட்டிலும் 9 ஆம் வீட்டிலும் தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்படும் போது பலன்கள் சிறப்பாக இருக்கும்.

9, 10 ஆம் அதிபதிகளின் தசா புக்திகளில் பலன்கள் கிடைக்கும். 9, 10 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று தசைகள் நடத்தும் போதும் பலன்கள் நன்றாக இருக்கும்.அதற்கு அடுத்தபடியாக 1,5, 4, 11 , 2 ஆகிய வீடுகளில் இந்த யோகம் சிறப்பான பலன்களைத் தரும் எனலாம்.

  • மேஷ லக்கினத்திற்கு 9ஆம் வீட்டதிபதி குரு. 10 ஆம் அதிபதி சனி. இருவரும் நட்பு கிரகங்கள் இல்லை என்பதால் மேஷ லக்கின ஜாதகருக்கு இந்த யோகம் சுமாரான பலன்களையேத் தரும்.
  • ரிஷப லக்கினத்திற்கு சனியே 9 மற்றும் 10 ஆம் வீட்டதிபதியாக வருவதால் சனி சிறப்பான பலன்களைத் தரும்.
  • மிதுன லக்கினத்திற்கு 9 ஆம் அதிபதி சனி. 10 ஆம் அதிபதி குரு. இவர்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் சுமாரான யோக பலன்களைத் தரும்.
  • கடக லக்கினத்திற்கு 9 ஆம் அதிபதி குரு.10 ஆம் அதிபதி செவ்வாய். குரு, செவ்வாய் சேர்க்கை குரு மங்கள யோகமும் பெற்று மிகச் சிறந்த பலன்களைத் தரும்.
தர்ம கர்மாதிபதி யோகம்
  • சிம்ம லக்கினத்திற்கு 9 ஆம் அதிபதி செவ்வாய். 10 ஆம் அதிபதி சுக்கிரன். எனவே, சுமாரான பலன்கள் தான்.
  • கன்னி லக்கினத்திற்கு 9 ஆம் அதிபதி சுக்கிரன். 10 ஆம் அதிபதி புதன். இருவரும் நண்பர்கள் என்பதால் யோக பலன்கள் சிறப்பானதாக இருக்கும்.
  • துலாம் லக்கினத்திற்கு 9 ஆம் அதிபதி புதன். 10 ஆம் அதிபதி சந்திரன். சுமாரான பலன்களை எதிர்பார்க்கலாம்.
  • விருச்சிக லக்கினத்திற்கு 9 ஆம் அதிபதி சந்திரன். 10 ஆம் அதிபதி சூரியன். இவர்களின் சேர்க்கை பத்தாம் வீடான சிம்மத்தில் நிகழ்ந்தாலும், ஏழாம் வீடான ரிஷபத்தில் நிகழ்ந்தாலும் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். இருவரின் பரிவர்த்தனை மிகச் சிறப்பான பலன்களை நிச்சயமாகத் தரும்.
  • தனுசு லக்கினத்திற்கு 9 ஆம் அதிபதி சூரியன். 10 ஆம் அதிபதி புதன். இருவரின் சேர்க்கை சிறப்பான பலன்களைத் தரும்.
  • மகர லக்கினத்திற்கு 9 ஆம் அதிபதி புதன். 10 ஆம் அதிபதி சுக்கிரன் என்பதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • கும்ப லக்கினத்திற்கு 9 ஆம் அதிபதி சுக்கிரன். 10 ஆம் அதிபதி செவ்வாய் என்பதால், சுமாரான பலன்கள் தான்.
  • மீனம் லக்கினத்திற்கு 9 ஆம் அதிபதி செவ்வாய். 10 ஆம் அதிபதி குரு என்பதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.மேலே சொன்னவை எல்லாம் பொதுப் பலன்கள் தான். மற்ற கிரக நிலைகள் பொருத்துப் பலன்கள் மாறக்கூடும்.

About ASTROSIVA

Leave a reply