Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

எந்த லக்கினங்களுக்கு சுக்கிரன் கெடக்கூடாது?

எந்த லக்கினங்களுக்கு சுக்கிரன் கெடக்கூடாது?

பொதுவாக, சுக்கிரன் எந்த லக்கினங்களுக்குமே கெடக்கூடாது. அதாவது, சுக்கிரன் அணி லக்கினங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்கினங்களுக்கு சுக்கிரன் யோக கிரகம் என்பதால் சுக்கிரன் கெடக்கூடாது. குறிப்பாக கும்ப லக்கினத்திற்கும், மகர லக்கினத்திற்கும் சுக்கிரன் ராஜ யோகாதிபதி என்பதால் கெடாமல் பலமாக இருக்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால், குரு அணி லக்கினங்களான மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்கினங்களுக்கு சுக்கிரன் யோகர் இல்லை என்றாலும், அவர் கெடக்கூடாது. அதாவது சுக்கிரன் பகை, நீச்சம் பெற்று ஸ்தான பலம் இழக்கக் கூடாது. அப்படி சுக்கிரன் பலம் இழக்கும் போது, சுக்கிரனின் காரகங்களான, சொகுசு வாழ்க்கை, இல்லற சுகம், வாகன சுகம் போன்றவற்றில் ஜாதகருக்கு பின்னடைவு ஏற்படும். எனவே எந்த ஒரு ஜாதகத்திலும் சுக்கிரன் பகை அல்லது நீச்சம் பெற்று கெடக்கூடாது.

சுக்கிரன்

குறிப்பாக, மேஷ லக்கினத்திற்கும், விருச்சிக லக்கினத்திற்கு சுக்கிரன் கெடவேக் கூடாது. ஏனெனில் இந்த லக்கினங்களுக்கு சுக்கிரன், ஏழாம் வீட்டதிபதியாகவும், களத்திர காரகனாகவும் அவரே வருகிறார்.
ஒருவருடைய திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா, இருக்காதா என்பதை நிர்ணயிக்க, அவரது ஏழாம் பாவம், ஏழாம் அதிபதி, மற்றும் களத்திர காரகன் சுக்கிரனையும் பார்க்க வேண்டும்.

மேலே சொன்ன மேஷ லக்கினத்திற்கும், விருச்சிக லக்கினத்திற்கும், ஏழாம் அதிபதியும், களத்திரக்காரகனும் சுக்கிரனே என்பதால், சுக்கிரன் கெட்டு,ஏழாம் பாவமும் கெட்டுவிட்டால், ஜாதகருக்கு திருமண வாழ்க்கையே இல்லாமல் போய் விடும் அபாயம் ஏற்படும்.

எனவே தான் மேஷ லக்கினத்திற்கும், விருச்சிக லக்கினத்திற்கும் சுக்கிரன் கெடவேக் கூடாது என்று சொல்கிறேன். இந்த இரண்டு லக்கினங்களுக்கும் சுக்கிரன் நட்பு பலத்துடன் 3, 6, 10, 11 ஆகிய பாவங்களில் நிற்பது சிறப்பு.

மேலே சொன்னவை எல்லாம் பொதுப் பலன்கள் தான். மற்ற கிரக நிலைகள் பொருத்துப் பலன்கள் மாறக்கூடும்.

About ASTROSIVA

Leave a reply