Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

தர்மகர்மாதிபதி யோகம் என்றால் என்ன?

தர்மகர்மாதிபதி யோகம் என்றால் என்ன?

ஒரு ஜாதகத்தில் கால புருஷ 9ம் அதிபதியான குருபகவானுக்கும், கால புருஷ 10ம் அதிபதியான சனி பகவானுக்கும் எந்த விதத்தில் சம்பந்தம் இருந்தாலும் அது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். இந்த கிரகங்களின் சம்பந்தத்தில் சனியின் 3,10 பார்வையில் குரு இருப்பது, சனியும் குருவும் ஒரே ராசி கட்டத்தில் சேர்ந்து இருப்பது, சனியும் குருவும் சம சம்பந்தமாக பார்ப்பது, சனி குருவை நோக்கி செல்வது அல்லது குரு மட்டும் சனியை பார்ப்பது அல்லது சனி வீட்டில் குரு நிற்பது அல்லது குரு வீட்டில் சனி நிற்பது போன்ற அமைப்பில் இருந்தால் அது தர்மகர்மாதிபதி யோகமாக பலன் தரும்.

தர்மகர்மாதிபதி யோகம்

ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் குருவும் சனியும் ஒரே ராசி கட்டத்தில் சேருவார்கள். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் குருவும் சனியும் சமசப்தமாக பார்ப்பார்கள். குருவும் சனியும் சம சப்தமமாக பார்ப்பது ஒரே ராசி கட்டத்தில் சேர்வதும் மிகுந்த சுபத்துவமான அமைப்பாகும். இது 100 சதவீதம் தர்மகர்மாதிபதி யோகமாக வேலை செய்யும்.

ஒரு ஜாதகத்தில் குரு மற்றும் சனியின் சேர்க்கை வேறு கிரக தொடர்பு இல்லாமல் இருந்தால் அது தர்மகர்மாதிபதி யோகமாக செயல்படும் அதன் மூலம் அந்த ஜாதகர் கீழ்கண்ட சுப பலன்களை அனுபவிக்கிறார்.

  • சாதாரண மனிதனாக பிறந்தால் கூட சாதனை மனிதர்களாக மாறுகிறார்கள்.
  • இந்த கிரக சம்பந்தம் இருக்கும் மனிதன் சாதாரண குடும்பத்தில் பிறந்து குடும்பமே கஷ்டப்பட்டால் கூட ஜாதகர் மட்டும் ஏதாவது துறையில் வெற்றி அடைகிறார்.
  • ஜாதகரின் சாதனையும் அவரின் வெற்றியும் அவரின் காலத்திற்குப் பிறகும் பெயர், புகழை நிலைத்திருக்க செய்கிறது.
  • எந்த திறமையும் இல்லாத சிலர் கூட இந்த கிரக சம்பந்தம் இருந்தால் தகுதிக்கு மீறிய தொழில், உத்தியோக ரீதியான முன்னேற்றத்தை அடைகிறார்கள்.
  • இந்த கிரக சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு நிச்சயமாக பொருளாதார முன்னேற்றம் உண்டு.
  • குரு மற்றும் சனியின் வலுவிற்கு ஏற்ப அவர்களின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல் நிர்ணயிக்கப்படுகிறது.
  • ஏதாவது ஒரு நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகம் உண்டு.
  • .சனி குரு இரண்டும் பலம் பெற்றால் பலவிதமான தொழில் மூலமாக வாழ்க்கை முன்னேற்றம் உண்டு.
  • அரசியல் பதவி, பலருக்கு நிலைத்து நிற்கக்கூடிய நல்ல பெயர், புகழை சம்பாதித்து கொடுத்திருக்கிறது.
  • அரசாங்க உத்தியோகத்தில் குறிப்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பெரும்பான்மையாக உள்ளது இந்த கிரக சம்மந்தம்.
  • அரசாங்கத்தின் ஏதோ ஒரு பிரிவில் உயர் அதிகாரியாக பணிபுரிவார்கள்.
  • தனியார் துறையில் பணிபுரிந்தால் அந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக பணிபுரிவார்கள்.
  • உத்தியோகம் தொழில் போன்றவற்றில் அவர்களுடைய சுய ஜாதக ரீதியான சனி குருவின் நிலைக்கு ஏற்ப அவர்களுடைய வருமானம் இருக்கும்.
  • அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட நியாயமான தொழில் மூலமாக வருமானம் வரும்.
  • இந்த கிரக சேர்க்க இருப்பவர்கள் எவ்வளவு தாழ்வான நிலைக்கு சென்றாலும் மீண்டும் உயர்ந்த நிலைக்கு சென்று விடுவார்கள்.
  • இந்த கிரக சம்மந்தம் உள்ளவர்களுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் சமாளித்து விடுவார்கள்.
  • கோயில் கட்டுவது, கும்பாபிஷேகம் செய்வது போன்றவற்றில் ஆர்வம் இருக்கும்.
  • கோவில்கள், சமூகத் தொண்டு நிறுவனங்களில் உயர் அதிகாரியாக இருப்பார்கள்.
  • சொந்த பந்தங்கள் இவர்களின் ஆலோசனைக்கு கட்டுப்படுவார்கள்.
  • தொழில், உத்தியோகம் மூலமாக இவர்களுக்கு குல கௌரவம் உயரும்.

About ASTROSIVA

Leave a reply