அங்கலட்சண சாஸ்திரம்
உங்களுக்கு நெற்றியில் மச்சம் இருக்கிறதா? எனில் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள், உங்கள் விருப்பம் போல் வாழ்க்கை அமையும், வாழ்க்கைத் துணைவரின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்குமாம்.
இதேபோல், மச்சங்கள் குறித்து இன்னும்பல பூர்வத் தகவல்களைச் சொல்கிறது அங்கலட்சண சாஸ்திரம்!
வலது செவியில் மச்சம் அமைந்திருப்பது ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும், பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். பலவிதமான தொழிலில் நல்ல பயிற்சி யும். தேர்ச்சியும் இருக்கும். பெற்றோரிடமும், மனைவி யிடமும் அதிக பாசமிருக்கும்.
இடது பக்க செவியில் மச்சம் இருப்பது ஆண்களுக்கு நல்ல பலனை அதிகம் தருவதில்லை; பெண்களுக்கு சிறந்த பலனைத் தரும். முயற்சியால் வெற்றி அடைவர். வாழ்வின் பிற்பகுதி விரும்பியவாறு அமையும்.
மூக்கில் மச்சம் அமையப்பெற்ற அன்பர்கள், முன்கோபிகளாக இருப்பார்கள். மனைவி-மக்களிடம் கெடுபிடியுடன் நடந்துகொள்வர். அதேநேரம், பெண் களுக்கு மூக்கு நுனியில் மச்சம் இருந்தால், சேவை மனப்பான்மை பெற்றிருப்பார்கள்.
முகவாயில் மச்சம் இருப்பது நல்ல அம்சமாகும். பெண்ணாக இருந்தால் தைரியசாலிகளாக இருப்பார். ஜோதிடம், வைத்தியம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். எனினும் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். குடும்ப வாழ்வு திருப்திகரமாக இருக்கும்.

அறிஞர்கள், மேதைகள், ஆராய்ச்சி யாளர்கள், விஞ்ஞானிகள், மகான்கள் போன்றோருக்கு நாக்கில் மச்சம் இருக்கும். நாக்கில் மச்சம் உள்ள அன்பர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். குழந்தை உள்ளம் படைத்த இவர்கள், மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவார்கள்.
கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள், திடகாத்திரமும் நல்ல ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள் எவருக் கும் அஞ்சாதவர். எப்போதும் மகிழ்ச்சி யாகவே இருப்பார்கள்
உதடுகளில் மச்சம் அமையப் பெற் றிருப்பது, பெருஞ் செல்வயோகத்தைக் குறிக்கும். அந்த அன்பரிடம் தாராள பணப்புழக்கம் இருக்கும். சரஸ்வதிதேவியின் கடாட்சம் உண்டு. கட்டடக்கலை, சிற்பம், ஓவியக்கலை போன்ற துறைகளில்பெரும் புகழை அடைவார்கள். சுகபோகங்களில் கட்டுக் கடங்காத விருப்பம் இவர்களிடம் இருக்கும்.
ஒருவருக்கு முதுகின் வலப்புறம் மச்சம் இருந்தால். பெரிய லட்சியவாதியாக இருப்பார்கள். வலப்புற முதுகில் மச்சம் உடைய பெண்கள், வேலை செய்து சம்பாதிப்ப வர்களாக இருப்பார்கள். முதுகின் இடதுபுறம் மச்சம் இருந்தால் இளமை பருவத்தில் மந்தநிலை ஏற்படும். கல்வி கற்பதில் இடையூறும் முயற்சிகளில் தோல்வியும் ஏற்படும்.
பொதுவாக மார்பில் மச்சம் உடையவர்கள், மத்திம வயதுக்குப் பிறகு வாழ்வில் நல்ல சுகத்தை அடைவார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசும் இயல்பு உண்டு. கஷ்டங்களைச் சகித்துக்கொள்வார்கள். சிற்பம், மரவேலை, சிலை செய்தல் போன்ற பணிகளில் சிறந்து விளங்குவார்கள். ரகசியத்தைக் கட்டிக்காப்பார்கள்.
ஒருவருக்கு வலது பக்க இடுப்பில் மச்சம் இருப்பின், அவர் நேர்மையானவராகத் திகழ்வார். நெருங்கிப் பழகும் உறவினர், நண்பர்களிடம் அளவு கடந்து அன்பு செலுத்துவார்கள். இடதுபக்க இடுப்பில் மச்சம் இருப்பின் திடமான உள்ளம், கடுமையாக உழைக்கும் இயல்பை பெற்றிருப்பர். கள்ளம் கபடமற்றவர்கள். இவர்கள் பிறந்த இடத்தை விட்டு, வெளி இடத்தில் வாழ்வை அமைத்துக்கொண்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
தொப்புளில் மச்சம் உடையவர்கள் அசாதாரணமான குணம் கொண்டவர்களாக விளங்குவார்கள். இவர் களின் திருமண வாழ்வில் சிறுசிறு சங்கடங்கள் அடிக்கடி ஏற்படும்.
பொதுவாக தொடைகளில் மச்சம் ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். வலது தொடையில் மச்சம் உடைய ஆண்கள் மன உறுதி படைத்தவர்கள். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். பிறர் எண்ணங்களை கண்டறியும் சக்தி படைத்தவர்கள். ஜன்ம விரோதியாக இருந்தாலும் இவர்களிடம் நேருக்கு நேர் உரையாடினால், சரணடைந்து விடுவார்கள்.
வலது கையில் மச்சம் இருப்பது மிகவும் உயர்ந்த அம்சம். வலது உள்ளங்கையில் மச்சம் இருக்கும் எனில், அவர்கள் சகல சாஸ்திரங்களிலும் வல்லவர்களாக இருக்கவேண்டும் என்பது விதி. குறிப்பாக கணித சாஸ்திரம். நீதி, பொறியியல் போன்ற வற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள். சிறுகச் சிறுக முன்னேறி உன்னதமான நிலையை அடைவார்கள்.