Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

நம்முடைய ஜாதகத்தில் நடப்பு திசா சரியில்லை என்றால் என்னசெய்ய வேண்டும்?

நம்முடைய ஜாதகத்தில் நடப்பு திசா சரியில்லை என்றால் என்னசெய்ய வேண்டும்?

நம் திசை சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், குல தெய்வத்தையும்,லக்கினாதிபதியையும் வாழ்க்கை முழுவதும் வணங்கவேண்டும்

வருடத்திற்கு ஒரு முறையாவது இரண்டு கோவில்களுக்கும் சென்று வர வேண்டும்.எப்போது செல்லவேண்டும் என்றால் குலதெய்வத்திற்கு அமாவாசையிலும், லக்கினாதிபதியை வணங்க நம்முடைய ஜன்ம நட்சத்திரத்தில் செல்லவேண்டும்.

 நடப்பு திசா

எளிமையாக கூறவேண்டும் என்றால் நம்முடைய பழக்க வழக்கம் நமக்கு முதல் பரிகாரம்.

நமக்கு என்ன திசை நடக்கிறதோ அதன் காரகத்தின் படி நன்மையாக நடந்து கொண்டால் நன்மையே நடக்கும்

உதாரணமாக:

கேது திசை என்றால்; சித்தர்கள் வழிபாடு, தியானம் செய்வது
ஞானிகள், சன்னியாசிகளை இழிவுபடுத்தாமல் இருப்பது

சுக்கிர திசை என்றால்; மனைவியிடம் விட்டு கொடுத்து செல்வது, பெண்களை இழிவாக பேசாமல் இருப்பது

சூரிய திசையில்; தந்தை சொல் கேட்டு மதித்து நடக்க வேண்டும். அரசு. அரசு சம்மதப்பட்ட துறைகளில் லஞ்சம் வாங்கமல் கொடுக்காமல் இருப்பது

சந்திர திசையில் ; தாயிடம் பாசமாக இருப்பது மனதை கட்டுப்பாடாக வைப்பது

செவ்வாய் திசையில்; சகோதரர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் கட்டபஞ்சாயத்து. ரவுடிசம் போன்ற செயல்களில் ஈடுபடகூடாது

ராகு திசையில்;போதை பொருள்களுக்கு அடிமை ஆக கூடாது
பெண்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

குரு திசையில்;ஆசான் வயதில் மூத்தவர்களை மதித்து அவர்கள் சொல்படி கேட்கவேண்டும். அவர்களை இழிவு படுத்தகூடாது

சனி திசையில் ;நேர்மையாக இருக்க வேண்டும், வேலை ஆட்கள், கீழ் நிலையில் உள்ளவர்களை இழிவாக பேசகூடாது

புதன் திசையில்; தாய்மாமன்களுடன் நல்லுறவை வளர்ப்பது. படிப்பு, ஆராய்ச்சிக்கு, உதவி செய்வது ஜோதிடர்களை திட்டாமல் இருப்பது மேலே உள்ளது போன்று அந்தந்த திசையில் செய்தால் நன்மை நடக்கும்.

மேலே உள்ளதை கவனித்தால் நன்கு புரியும்.நல்லதை செய்ய வேண்டும் கெடுதலை செய்ய கூடாது.

About ASTROSIVA

Leave a reply