Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் 2025: முருகன் 60 சிறப்பு தகவல்கள்

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் 2025: முருகன் 60 சிறப்பு தகவல்கள்

திருச்செந்தூர் முருகன் 60

முருகனின் திருவுருவங்கள்: 

1, சக்திதரர்,

2. கந்த சுவாமி, 

3.தேவசேனாதிபதி, 

4.சுப்பிரமணியர்,

5. கஜவாகனர், 

6.சரவணபவர்

7. கார்த்திகேயர்

8.குமாரசுவாமி

9.சண்முகர்

10.தாரகாரி, 

11. சேனாபதி, 

12. பிரமசாத்தர், 

13.வள்ளி கல்யாண சுந்தரர், 

14. பாலசுவாமி, 

15. கிரவுஞ்ச பேதனர், 

16.சிகிவாகனர் எனப்படும். 

முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், வன்மம், குரோதம், லோபம், மதம்,  மாற்சர்யம்.

திருச்செந்தூர் முருகன்
  • முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி.இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது). திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

  1. சூரபத்மனை வதம் செய்தது- திருச்சந்தூர்
  2. தாரகாசுரனை வதம் செய்தது – திருப்பரங்குன்றம்
  3. இந்த இருவரின் சகோதரனான சிங்கமுகாசுரனை வதம் செய்தது -போரூர் ஆகும்.
  • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும்போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.
  • செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
  • முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக் கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரம் அளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
  • ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாக தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். வெண்ணை மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனை பெறுவார்கள்.

முருகனின் இறைபணிச் செல்வர்கள்:

  1. அகத்தியர்,2. அருணகிரிநாதர்,3. ஔவையார்,4. பாம்பன் சுவாமிகள்,5. அப்பர் அடிகளார்,6. நக்கீரர்,7. முசுகுந்தர்,8. சிகண்டி முனிவர்,9. குணசீலர்,10. முருகம்மையார்,11. திருமுக கிருபானந்த வாரியார்,12. வள்ளி மலை சுவாமிகள்,13. குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆவார்கள்.
  • திருப்பரங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்காக பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.
  • திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணி திருவிழாவின் ஏழாம் நாள் விழாவில் தங்க பல்லக்கில் எழுந்தருளும் முருகப்பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சியளிப்பார்.
  • கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய சோஸ்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்து பாவங்களும் நிவர்த்தியாகும்.

முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள்

திதி – சஷ்டி ,

நட்சத்திரம் – கார்த்திகை ,விசாகம்

நாட்கள் – திங்கள் ,செவ்வாய்

  • முருகன் கங்கையால் தாங்க பட்டான் இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான் ஆகையினால் சரவணபவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாகப் பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.
  • குமரக்கோட்டம் என்பது சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும் இது காஞ்சிபுரத்தில் உள்ளது.
  • வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, திரளஞ்ச போதகன், சக்திதரன், தேவசேனாதிபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில்வாகனன், சிகிவாகனன் பிரம்மசாரி, பால சுவாமி, சேனாளி,கல்யாண சுந்தரன், அக்னி ஜாதன், சரேபயன், குகன், தேசிகன் காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.
திருச்செந்தூர் முருகன்
  • கந்த பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றியவர் அருணகிரிநாதர்.
  • “முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்” என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.
  • அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.
  • அதர்வண வேதத்தில் முருகன் அக்னியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்ரனின் புதல்வன் எனவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
  • முருகனைக் குறித்து “குமார சம்பவம்” என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி காளிதாசர்.
  • யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்து பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
  • கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.
  • முருகப்பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்று பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர் ,அனந்தர்,நந்தி,சதுர்முகர்,சக்ரபாணி,மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து முருகன் அருளால் மீண்டும் மனிதராகினர்.
  • முருகன் கையில் உள்ள வேல் இறைவனின் ஞான சக்தி என பெயர்பெறும்.
  • முருகனே திருஞானசம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.
  • பிரம்மசரிய-கிருகஸ்த-சந்நியாச கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
  • தமிழகத்தில் முருகனுக்கு குடைவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளி கோயில், மாமல்லபுரம்.
  • முருகக் கடவுளின் அடையாள பூ காந்தல் மலர்க் கண்ணியாகும்.
  • கந்தர் சஷ்டி திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.
  • தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிற கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற் கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.
  • மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது.
  • முருகனுக்கு விசாகன் என்று ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்று பொருளாகும்.
  • கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.
  • முருகனின் மூல மந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.
  • வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.
  • முருகப்பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.
  • வேடுபறி என்பது முருகப்பெருமான் வள்ளியை சிறை எடுத்ததை கொண்டாடும் விழாவாகும்.
  • இனிய பெருமானின் திருவடிப்பட்ட இடம் ஞானமலை ஆகும்.
  • முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.
திருச்செந்தூர் முருகன்
  • எத்தனை துன்பம் எதிர்கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடி பொழுதிலே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்து தணிகையாற்றுப்படை கூறுகின்றது.
  • முருகப்பெருமானுக்காக கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்ய சோழன் இதனை கட்டினான். இந்த கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையும், மறுகையில் சின் முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.
  • முருக வழிபாடு என்பது ஷன் மதம் என்று சொல்லப்படுகின்றது.
  • சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில்உள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் முருகன் அருளால் உண்டாகும்.
  • முருகனைப் போன்று கருப்ப வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.
  • முருகனுக்கு உருவம் இல்லாத கோவில் விருத்தாசலத்தில் உள்ளது பெயர் கொளஞ்சியப்பர் அருவுருவநிலை பிரார்த்தனை தலம் என்று இதனை கூறுவார்கள்.

About ASTROSIVA

Leave a reply