Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

பெண்கள் நெற்றி வகிட்டில் என் குங்குமம் வைக்க வேண்டும் ?

பெண்கள் நெற்றி வகிட்டில் என் குங்குமம் வைக்க வேண்டும் ?

குங்குமம்

இப்பொழுது பல பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதை மறந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வகிட்டில் எங்கே வைப்பது?.. அதுவும் ஸ்டிக்கர் பொட்டு வைப்பவர்கள் வகிட்டை பற்றி கவலைப்படுவதில்லை.. ஆனால் நெற்றி வகிட்டில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும். அது அவர்கள் சுமங்கலித்துவத்தை அதிகப்படுத்தும். அதாவது கணவனின் ஆயில் தோஷத்தை நீக்கும்.

குங்குமம்

வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதால், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமையும். மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும். அதனால் தான் நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு உடனடியாக தணிகிறது.

மகாலட்சுமி ஒவ்வொரு இடத்திலும் வாசம் செய்கிறாள். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று பெண்களின் வகிடு.அது மகாலட்சுமி வாசம் செய்யும் புள்ளி .அங்கே குங்குமம் வைப்பதால் சகல ஐஸ்வர்யங்களும், நல்வாழ்வு கிடைக்கும். அது மட்டும் அல்ல ,காலில் அணியும் மெட்டியும், கழுத்தில் அணியும் தாலியும் வகிட்டில் வைக்கும் குங்குமமும், பெண்களின் மங்களகரத்தை அதிகரிப்பதோடு அவள் திருமணமானவள் என்பதை சொல்லும்..

About ASTROSIVA

Leave a reply