சரப சூலினி
கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்தத்தலம். இங்கே அருள்மிகு காமாட்சியம்மன் சமேதராக கோயில் கொண்டிருக்கிறார். அருள்மிகு கைலாசநாதர் இந்த கோயிலில் தனி சன்னதியில், அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க சரப சூலினியும் குடி கொண்டிருக்கிறாள்.
சிவ ஆணைப்படி பிராசமுனிவர் இங்கு வந்து சரப சூலினியை பிரதிஷ்டை செய்து ஆயிரம் ஜெயமங்களா யாகம் செய்து வழிபட்டார். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராக திகழும் பெரும் பேறும் கிடைத்தது என்கிறது புராணம். இந்த கோயிலில் பௌர்ணமிதோறும் மாலை 5 மணி அளவில் ஜெயமங்களா மகாயாகம் நடைபெறும். அப்போது பிராசமுனிவரும் சூட்சம வடிவில் வந்து வழிபடுவதாக ஐதீகம்.

பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியம் நல்லபடியாக நடக்குமா என்பதை அறிய சரப சூலினியின் அருளையும் அனுமதியையும் வேண்டி வருகிறார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சை பழம் அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும் காரியத்தை தொடங்கலாம் என்பது அன்னையின் சித்தமானால் அந்த எலுமிச்சை அம்மையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழும்.
இங்கு நடைபெறும் ஜெயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும். திருமண தடை நீங்கி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். வம்சவிருத்தி உண்டாகும். இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம். வழக்குகள் சாதகமாகும். அஷ்ட பைரவர்களை வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
ஸ்ரீ வாராஹி பாமாலை
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டு கண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு
வட்டத்து ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட்டது நடுவே
ஆராதனை செய்து அருச்சித்து பூஜித்து பணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ்வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹி தன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப்புரம் எரித்தோன் வாமாபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹி என் பஞ்சமி கண் சிவந்தாள்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.
எங்கும் எரியக்கிரிகள் பொடிபட எம் பகைஞர் அங்கம்
பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து பொங்கும்
கடல்கள் சுவறிடச் சூலத்தை போகவிட்டுச் சிங்கத்தின்
மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.
ஸ்ரீ வாராஹி பாமாலையை எவர் ஒருவர் மூன்று வேளையும் பாராயணம் செய்கிறார்களோ அவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றியும் அவரது சத்ருக்கள் ஸிம்மத்தை கண்ட யானைகூட்டம் சிதறி ஓடுவது போல் சத்ருக்கள் ஓடி அழிந்துவிடுவார்கள். போகத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பதுடன் ரோகம் தரித்ரம் ஆகியவை அவர்களை விட்டு அகலும்.
கோவில் இருப்பிடம்