பித்ரு தோஷம்
புதுச்சேரி மாநிலம் வில்லியனூருக்கு அருகில் உள்ளது திருக்காஞ்சி. இங்கு சங்கராபரணி நதிக்கரை ஓரம், மேற்கு நோக்கி சத்யோஜாத மூர்த்தியாக கோயில் கொண்டிருக்கிறார் கங்கை வராக நதீஸ்வரர். அமாவாசை நாளில் இங்குள்ள வராக நதி எனப்படும் சங்கராபரணி ஆற்றில் நீராடி ஈஸ்வரனை பக்தியோடு வழிபடுவதால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.