பல்லி விழும் பலன்
பல்லி விழுதல் பற்றிய நம்பிக்கைகள் தமிழ் கலாச்சாரத்தில் பழங்காலத்தில் இருந்து உள்ளன. இது நல்லதா? அல்லது கெட்டதா? என்பதை அதன் நேரம், இடம் மற்றும் திசை அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

பல்லி விழுதலின் பலன்
- தலை – கலகம்
- குடுமி – சுகம்
- கூந்தல் – லாபம்
- முகம் – பந்து தரிசனம்
- சிரசு – மரணம்
- நெற்றியில் – பட்டாபிஷேகம்
- வல புருவம் ,இடப் புருவம் – ராஜானுக்கிரகம்
- வலது ,இடது புருவ மத்தியில் – புதல்வர் நாசம்
- வலக் கபாலம் – சம்பத்து
- இடக் கபாலம் – அன்பு ,தரிசனம்
- வலக்கண் – சுபம்
- இடக்கண் – கட்டுப்படுதல்
- மூக்கு – வியாதி
- மூக்கு நுனி – விசனம்
- மேல் உதடு – பொருள் நாசம்
- கீழ் உதடு – தன லாபம்
- வாய் – பயம்
- வலது காது – தீர்க்காயுள்
- இடது காது – வியாபாரம்
- கழுத்து – சத்ரு நாசம்
- வலது புஜம் – ஆரோக்கியம்
- இடது புஜம் – ஸ்திரீ சுகம்
- வலக்கை – துக்கம்
- இடக்கை – துயரம்
- வலது மணிக்கட்டு – பீடை
- இடது மணிக்கட்டு – கீர்த்தி
- வலது கை விரல் -ராஜ சன்மானம்
- இடது கை விரல் – துயரம்
- மார்பு – தன லாபம்
- இருதயம் – சௌக்கியம்
- வயிறு – தான்ய லாபம்
- தேகம் – தீர்க்காயுள்
- வலது விளா எலும்பு – வாழ்வு
- இடது விலா எலும்பு – மரணம்
- ஆண் குறி – தரித்திரம்
- இடது பாதம் – துக்கம்
- இடது கால் விரல் நகங்கள் – தன நாசம்
- தேகத்தில் ஓடல் – தீர்க்காயுள்
குறிப்பு : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தங்க பல்லியை கைகளால் தொட்டு வணங்கினால் பல்லி தோஷம் விலகும்.
பல்லி விழும் திசை பலன்
- வலப்பக்கம் விழுதல்: நல்ல அதிர்ஷ்டம், பண வரவு
- இடப்பக்கம் விழுதல்: எச்சரிக்கை, தடைகள் வரலாம்
- தலைமீது விழுதல்: பெரிய முன்னேற்றம்
- காலில் விழுதல்: பயணத்தில் தாமதம்
நேரத்தின் படி பலன்
- காலை நேரம்: நல்ல செய்தி
- மாலை நேரம்: பொருளாதார லாபம்
- இரவு நேரம்: உடல் நலக்குறைவு
அறிவியல் பார்வை
பல்லிகள் பூச்சிகளை உண்ணும் பயனுள்ள உயிரினங்கள். இவை வீட்டிற்குள் வருவது இயற்கையானது. இந்த நம்பிக்கைகள் மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.