இந்த 6 விஷயங்களை செய்தால் போதும் வீட்டில் செல்வம் கொழிக்கும் !!
தினமும் காலையில் பறவைகள் உண்பதற்கு தானியங்கள் இடுவதும், பசுவுக்கு புல் வழங்குவதும் விசேஷம். இதனால் வீட்டில் வறுமை நீங்கும்.
காலையில் எழுந்ததுமே இல்லாள் பசு,தங்க நாணயங்கள் அல்லது தங்க குடம் இருக்கும் படத்தை பார்த்தால் செல்வம் பெருகும்.
தினமும் காலையில் குளித்து முடித்ததும் சிறிதளவு சர்க்கரை எடுத்து வீட்டு வாசலில் தூவி வர வேண்டும். அப்படி தூவும் சர்க்கரை எறும்புகள் உள்ளிட்ட சிறு பூச்சிகளுக்கு உணவாகும். இப்படி செய்ய செய்ய கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
ஆலய மண்டபங்களில் விதானத்தில் ‘இணைய கயல்’ சிற்பங்களைக்(இரட்டை மீன்கள்) காணலாம். இவை மங்கல சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. திருக்கோவிலுக்கு செல்லும்போது இந்த மீன்களை தரிசிப்பதால் செல்வம் செழிக்கும். சகல சுபிட்சங்களும் உண்டாகும்.

மல்லிகை மலர்களில் ஒருவகை பிச்சிப்பூ. வாசனை மிகுந்தது. ‘பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலி’ என்று அம்பிகையை பாடியுள்ளார் அபிராமி பட்டர். பிச்சிப்பூவை கொண்டு மாலை தொடுத்து சிவனாருக்கு சமர்ப்பித்து வழிபட வேண்டிய செல்வங்கள் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
விபூதியுடன் சந்தனம் பன்னீர் ஆகியவற்றை கலந்து பூசி லிங்கத்தை செய்து வழிபடும் வழக்கம் உண்டு. இந்த லிங்கத்தை ‘பஸ்மலிங்கம்’ என்று சொல்வார்கள். சத்ரு ஜெயம், காரிய வெற்றி, செல்வ செழிப்பு ஆகியவற்றை விரும்புவோர் விபூதி லிங்கத்தை வழிபட வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.