இந்த உலகம் இயங்குவதற்கு சூரியனே ஆதார சக்தியாக இருந்து செயல்படுகிறார் என்று குறிப்பிட்டு உருவாக்கப்பட்டதே ‘ஆதித்ய ஹ்ருதய’ ஸ்தோத்ரம்ஆகும்.
இதனை அகத்திய முனிவருக்குஅன்னை பராசக்தியே உபதேசித்ததாக சொல்லப்படுகிறது. ராம-ராவண யுத்தத்தின்போது அகத்தியர் ஸ்ரீராமனுக்கு இந்த மந்திரத்தை உபதேசித்தார் என்றும் இதனைக் கொண்டு சூரிய வழிபாடு செய்துராமன் போரில் வென்றான் என்றும் சொல்வார்கள்.
அகத்தியர் ஸ்ரீராமனிடம்,’ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம், ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்’ என்று சொல்லி இந்த மந்திரத்தை உபதேசித்தாராம். அதாவது இந்த மந்திரத்தை அனுதினமும் உச்சரித்து சூரியனை வணங்குவதன் மூலமாக எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடிய திறனையும் வெற்றியைக் காணும் திறனும் உண்டாகும் என்பதே இதன் பொருள்.
நாமும் இந்த ஸ்தோத்ரத்தை தினமும் சொல்லி சூரியனை வணங்குவதன் மூலமாக உடல் பலம், மனோபலம் பெறுவதோடு எதிரிகளை வீழ்த்தி வெற்றியும் காண்போம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.