செவ்வாய் தோஷம்
லக்கினத்திற்கு 2,4,7,8,12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்பது பொது விதி.ஆனால் ஆண்களுக்கு 2,7,8லும் பெண்களுக்கு 4,8,12லும் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்பது சிறப்பு விதி.
மிதுனம் -கன்னி 2மிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும்,ரிஷபம் -துலாம் 12மிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும்,மேஷம் -விருச்சிகம் 4மிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும்,மகரம்-கடகம் 7மிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும்,தனுசு-மீனம் 8மிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷ நிவர்த்தியாகும்.

செவ்வாய் சிம்மம் ,விருச்சிகம் ,மகரம் ,கும்பம் இவைகளில் இருந்தால் செவ்வாயினால் ஏற்படும் எந்த தோஷமும் இல்லை.
செவ்வாய் இருக்கும் ராசிநாதன் செவ்வாய்க்கு கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் ,புதன் ,சந்திரன் ,சுக்ரன் ,குரு ஆகியவர்களோடு கூடினாலும் அவர்கள் பார்வை பெற்றாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
கடக ,சிம்ம லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாயினால் வரும் எவ்வகை தோஷமும் இல்லை.