திருவோணம் நட்சத்திரம்
திருவோண நட்சத்திரத்தின் வலிமை
“ஓதிய பொருளும் வல்லான் உயர்ந்திடும் புகழும் பூண்பான் தாதவிழ் குழலினாக்கு த் தனத்தோடு முயலவல்லான் நீதியும் உடையனாகும் நினைத்தது முடிக்க வல்லான் தீதொரு நாளும் செய்யான் திருவோண நாளினானே “
-மரண கண்டிகை
கல்வியிலும், கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஞானம், அறிவு, தெய்வீக சக்தி அதிகம் பெற்றிருப்பார்கள். வாழ்க்கையில் தனிப்பட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பார்கள். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க விரும்புவார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோகங்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையை கொண்டிருப்பார்கள். சகல விதத்திலும் சிறந்து விளங்குவார்கள். பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து செய்து முடிப்பார்கள். சொந்த முயற்சியால் தொழிலில் சிறந்து விளங்குவார்கள்.
| திருவோண நட்சத்திர குறிப்புகள் | |
| ராசி வடிவம் | மூன்று கால்கள் |
| பாலினம் | ஆண் |
| அதிபதி | சந்திரன் |
| அதிதேவதை | ஹயக்ரீவர் |
| அதிஷ்ட நிறம் | வெண்மை |
| மலர்கள் | வெண் தாமரை |
| விருட்சம் | எருக்கு |
| அதிஷ்ட உலோகம் | வெள்ளி |
| உறுப்பு | முழங்கால் |
| விலங்கு | பெண் குரங்கு |
| பட்சி | நாரை |
| அதிஷ்ட தெய்வம் | அம்மன் |
| கணம் | தேவ |
| பஞ்சபூதம் | வாயு |
திருவோண நட்சத்திரத்தின் பலவீனம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன சஞ்சலம், எண்ணங்களின் ஓட்டம் மிகைப்படுத்துவதால் குழப்பம் அடைவார்.
கூட்டு கிரக பலன்கள்
(திருவோண நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன் பிற கிரகங்கள் இணையும் பொழுது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.)
திருவோண நட்சத்திரத்தில் சூரியன் இருந்தால் மரியாதைக்குரியவர்.
திருவோண நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அதிக காம எண்ணம் உடையவர்.
திருவோண நட்சத்திரத்தில் புதன் அமர்ந்திருந்தால் குடும்ப பாசம் அதிகம் உடையவர்.
திருவோண நட்சத்திரத்தில் சுக்ரன் அமர்ந்திருந்தால் அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர்கள்.
திருவோண நட்சத்திரத்தில் சனி அமர்ந்திருந்தால் கடுமையான சொல் உடையவர். வட்டி தொழில் லாபம் உண்டு.
திருவோண நட்சத்திரத்தில் குரு அமர்ந்திருந்தால் நினைத்த காரியத்தை முடிக்க கூடியவர்கள்.
திருவோண நட்சத்திரத்தில் ராகு அமர்ந்திருந்தால் குடும்பத்தில் ஆதரவு இருக்காது.
திருவோண நட்சத்திரத்தில் கேது அமர்ந்திருந்தால் கேளிக்கையும், பொழுதுபோக்கையும் வாழ்க்கையாக கொண்டவர்கள்.
திருவோண நட்சத்திர பாத பலன்
திருவோண நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ நவாம்சம் செவ்வாய் பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் மன உறுதி இல்லாதவர்.
திருவோண நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் ரிஷப நவாம்சம் சுக்கிர பகவானால் ஆளப்படுகிறது. நோயின் தாக்கத்தால் நிம்மதி குறையும்.
திருவோண நட்சத்திரத்தின் மூன்றாவது பாகம் மிதுன நவாம்சம் புதன் பகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் ஆணவத்தால் பகை வளர்ப்பர்.
திருவோண நட்சத்திரத்தின் நான்காவது பாதம் கடக நவாம்சம் சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் தெளிந்த சிந்தனையுடையவர்.
திருவோண நட்சத்திர நாளில் செய்ய தகுந்த காரியங்கள்
சந்திரன் இடப்பெயர்ச்சிக்கு காரக கிரகம் என்பதால் இந்த நட்சத்திர நாளில் இடப்பெயர்ச்சி, வீடு மாற்றம் செய்யலாம்.
கலை, இசை போன்றவற்றுக்கு சந்திரன் அதிபதி என்பதால் திருவோண நட்சத்திரம் வரும் நாளில் கலை இசை பயிற்சி போன்றவற்றை தொடங்கலாம்.
திருவோண நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் பல மடங்கு புண்ணிய பலன்கள் பெருகும்.
திருவோண நட்சத்திரத்தில் செய்யக்கூடாத காரியங்கள்
புதிய தொழில் முயற்சிகள் செய்யக்கூடாது
பலன்தரும் பரிகாரம்
திருவோண நட்சத்திரத்தன்று காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் உங்கள் வாழ்க்கையில் அளப்பரிய மாற்றத்தை சந்திரன் ஏற்படுத்திக் கொடுப்பார்.
திருவோணம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையிலும் எத்தனை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும் கூட எளிமையாக வாழ்வார்கள்.
திருவோண நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள்
அடுத்தவர் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார். நடத்தையில் அடக்கமும், நேர்மையும் நிறைந்திருக்கும். அடுத்தவர்களின் நம்பிக்கைக்கு புறம்பாக நடந்து கொள்ள மாட்டார்கள். தவறு என்று தெரிந்தால் அதை உடனே சுட்டிக்காட்ட தயங்க மாட்டார்கள். நல்ல நீதிமான்களாக திகழ்வார்கள்.
குடும்பம்: திருவோண நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் மனைவி மீதும் தாயின் மீதும் அதிக பாசம் வைத்திருப்பார்கள். சில நேரம் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
கல்வி: கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிலர் அதிக கல்வி கற்காவிட்டாலும் அதிக அனுபவம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.
தொழில்:வேலை மற்றும் தொழில் இரண்டுமே வெற்றிகரமாக அமையப்பெற்றவர்கள். இரண்டிலுமே வெற்றி காண்பார்கள். 24 வயதிலிருந்து நல்ல மாற்றங்களும் வசதியான வேலை, நல்ல சம்பாத்தியமும் கிடைக்கும்.
திருமண பொருத்தம்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம், அஸ்தம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம் ஆகியவை நன்றாக பொருந்தும்.
ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் ராகு திசை நடந்தால் மன குழப்பங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு மன நிம்மதி குறையும்.
திருவோண நட்சத்திர பெண்
குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தூய்மைக்கு முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான கொள்கைகளுடன் வாழ்வார்கள்.
குடும்பம்: இந்த நட்சத்திர பெண்கள் திருமண வாழ்க்கை சுகமாக இருக்கும். நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.
திருமண பொருத்தம்
ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம், பூசம் நீங்களாக மற்ற நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் ராகு திசை சந்திர புத்தியில் மறதி நோயால் பாதிக்கப்படுவார்.
நட்சத்திர பலன்கள் அன்றைய தினத்தின் நட்சத்திரத்தைக் கொண்டு தின பலமறியும் குறிப்பு
| திருவோணம் நட்சத்திர தின பலன் | |
| திருவோணம் | பதட்டம் |
| அவிட்டம் | பணவரவு |
| சதயம் | ஆபத்து |
| புரட்டாதி | சூழ்ச்சி |
| உத்திரட்டாதி | தாமதம் |
| ரேவதி | சாதனை |
| அஸ்வினி | ஏமாற்றம் |
| பரணி | வெற்றி |
| கார்த்திகை | முன்னேற்றம் |
| ரோகிணி | தண்டனை |
| மிருகசீரிடம் | புதிய அனுபவம் |
| திருவாதிரை | பின்னடைவு |
| புனர்பூசம் | வாக்குவாதம் |
| பூசம் | கலக்கம் |
| ஆயில்யம் | அதிஷ்டம் |
| மகம் | வீண் வம்பு |
| பூரம் | சிக்கல் |
| உத்திரம் | பண பகை |
| அஸ்தம் | ஆசை நிறைவேறும் |
| சித்திரை | திடீர் வெற்றி |
| சுவாதி | எதிர்பாராத தோல்வி |
| விசாகம் | பிரச்சினை |
| அனுஷம் | தடைகள் |
| கேட்டை | சாதகம் |
| மூலம் | வேதனை |
| பூராடம் | இழப்பு |
| உத்திராடம் | நன்மை |
| குறிப்பு:திருவோண நட்சத்திரக்காரர்கள் அன்றைய நடப்பு நட்சத்திரத்தில் உள்ள பலன்களை பார்த்து அதன்படி செயல்படவும் | |






Leave a reply