அனுமனுக்கு மட்டும் ஏன் செந்தூரம் வெற்றிலை மாலை?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

அனுமன் ஜெயந்தி

Answer ( 1 )

    0
    2025-12-19T03:07:24+00:00

    Please briefly explain why you feel this answer should be reported.

    Report
    Cancel

    சீதை அசோகவனத்தில் அனுமன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக வெற்றித் திலகம் இட்டாள் என்று ஒரு செவி வழிக் கதை உண்டு. சிந்தூரத் திலகத்தை யாரெல்லாம் அனுமனுக்கு இடுகிறார்களோ அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருவான் அனுமன். ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் அனுமனுக்கு சிந்துரம் அணிவிப்பது வழக்கமாக இருக்கிறது.

     

    வெற்றிலை என்பது வெற்றி தரும்இலை. அனுமனுக்கு வெற்றிலை மாலை மற்றும் ராமநாமம் எழுதிய மாலை முதலியவற்றைச் சாற்றி வழிபடுகின்றனர். காரிய சித்திக்கு வெற்றிலை மாலை அணிவிப்பதை பலரும் நம்பிக்கையோடு செய்து வருகின்றனர்.

     

    இராம அவதாரத்தை முடித்துக் கொண்டு, தன்னுடைய ஜோதிக்கு ராமன் புறப்படும்போது அனுமனையும் வைகுண்டத்திற்கு அழைக்கிறார். இந்த உலகத்தில் ராம நாமம் இருக்கும் வரை, நான் இருப்பேன் என்று அனுமன் சொல்லி விட்டார். அதனால் சிரஞ் சீவியாக எல்லா யுகங்களிலும் அனுமார் இந்த பூவுலகத்தில் தங்கி நம்மை ஆசீர்வதிக்கிறார்.

     

    திவ்ய நாம சங்கீதத்தில் அனுமனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரே தம்புரா வைத்துக் கொண்டு ராம நாம பஜனை செய்து கொண்டிருக்கிறார் பஜனை சம்பிரதாயத்தில் தோடைய மங்களம், விநாயகர் துதி என்று ஆரம்பித்து அனுமனை பாடி முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கணபதி பூஜையில் ஆரம்பித்து அனுமர் பூஜையில் முடிப்பதால் பிள்ளையார் பிடிக்க குரங்கில் முடிந்தது என்ற சொல்வடை பிரசித்தம் ஆயிற்று.

Leave an answer

Browse
Browse