Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

வாஸ்து சாஸ்திரம் : அனைவருக்கும் பயன்படும் வாஸ்து குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரம் : அனைவருக்கும் பயன்படும் வாஸ்து குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரம்

  • தென்மேற்கு மூலைப்பகுதியில் பணம், நகை போன்ற முக்கிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
  • தென்மேற்கு அறையில், தென்மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பீரோ அல்லது பணப்பெட்டி வைக்க வேண்டும்.
  • அன்றாட தேவைக்கு வேண்டிய பணத்தை கொஞ்சம் வடக்கு மத்தியில் வைத்து உபயோகப்படுத்தலாம்.
  • பீரோ,கட்டில் போன்ற கனமான பொருட்களை தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.
  • கட்டிலை சுவரில் ஒட்டாமல் வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் அதிக இடம் விட்டுப் போட வேண்டும்.
  • உறங்கும் போது தலைக்குப் பின்னே ஜன்னல்கள் இருக்கக் கூடாது. சுவர் இருப்பது நல்லது
வாஸ்து சாஸ்திரம்
  • இரவு நேரத்தில் திரைச் சீலைகளால் ஜன்னல்களை மூடவேண்டும். இது பண விரயத்தை தடுக்கும்.
  • வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.
  • வீட்டில் நுழைந்த உடன் சமையலறை அல்லது உணவு உண்ணும் மேஜை தென்படக்கூடாது.
  • பூஜை அறைக்குப் பக்கத்தில் படுக்கை அறை, அல்லது கழிவறை இருக்கக் கூடாது.
  • பூஜையறையில் உள்ள விளக்கு ஒன்று கிழக்கு நோக்கியும் மற்றொன்று வடக்கு நோக்கியும் சிறிது நெய்விட்டு ஏற்றினால் நல்லது.
  • விளக்கின் தீபத்தில் இருந்து கற்பூரம் ஊதுபத்தி ஏற்றக்கூடாது.
  • . படிக்கும் மேஜை ஜன்னலை நோக்கி இருக்கக் கூடாது.
  • படிக்கும் அறையில் சூரிய வெளிச்சம் நேரிடையாக வரக்கூடாது.
  • படிக்கும் அறையில் மீன் தொட்டியை வைக்க வேண்டாம்.
  • படிக்கும் போது செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வடக்கு திசை நோக்கியும் மற்ற நாட்களில் கிழக்கு திசை நோக்கியும் படிப்பது நல்லது.
  • வாரம் ஒரு முறையாவது மாவிலைத் தோரணங்கள் பூக்கள் கொண்டு அலங்காரம் செய்வது நல்லது.
  • சில சமயங்களில் வீடுகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அந்த நேரங்களில் வீட்டின் வடக்கு, கிழக்கு திசை பார்த்து சிறிது நேரம் அமர்ந்திருந்தால் மனதிற்கு சாந்தி கிடைக்கும்.
  • கடல் நீர், கஸ்தாரி மஞ்சள், கோமியம் இவற்றின் கலவை கொண்டு கழுவிவிடுவதாம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அழிந்து நல்ல சக்திகள் உருவாகும்.
  • தரையின் மீது அதிக பொருட்களை வைக்க வேண்டாம். இது பொருள் இழப்பை உண்டாக்கும். அலமாரிகள், மேடைகள் மீது வைக்கவும்.
  • கிழக்கு நோக்கி உணவு உண்டால் ஆயுள் அதிகரிக்கும்.
  • மேற்கு நோக்கி உணவு உண்டால் புகழ் அதிகரிக்கும்.
  • தெற்கு நோக்கி உணவு உண்டால் செல்வம் பெருகும்.
  • வடக்கு நோக்கி உணவு உண்டால் நோய்கள் வரும்.
  • அடுப்பின் பின்புறம் ஜன்னல்கள் இருக்ககூடாது. அது செல்வ நிலையை பாதிக்கும்.
  • குளிக்கும் போது கிழக்கு, வடக்கு நோக்கி குளிப்பது நல்லது.
  • குழாயில் தண்ணீர் சொட்டிக் கொண்டு இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பின் செல்வம் வெளியேறும்.
  • மேல்நிலை நீர் தண்ணீர் தொட்டி தென்மேற்கில் இருக்கவேண்டும்.
  • குடிநீர் பாத்திரம் எப்பொழுதும் நீர் நிரம்பியதாக இருக்கவேண்டும்.
  • தென்மேற்கு பகுதியில் மருந்துப் பொருள் வைத்திருக்கவேண்டும்.
  • வடகிழக்கு பகுதியில் அன்றாடம் உபயோகிக்கும் மருந்துகளை வடகிழக்கு திசை நோக்கி சாப்பிடுவது, மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்தி நோயை விரைவில் குணப்படுத்தும்.
  • வீட்டை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்யும் போது தென்மேற்கு மூலையில் துவங்கி வடகிழக்கு மூலையில் குப்பையை சேர்த்து அள்ள வேண்டும்.
  • வீட்டை தண்ணீர் விட்டு கழுவும் போதும் அல்லது துடைக்கும் போதும் தென்மேற்கு மூலையில் ஆரம்பித்து வடகிழக்கு மூலையில் முடிக்க வேண்டும்.
  • கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பேசும் அமைப்பு சிறந்தது.
  • கிழக்கு, வடக்கு பகுதிகளில் கனமான பொருட்கள் வைக்கக் கூடாது.
  • வடகிழக்கு பகுதியில் தண்ணீர் கிண்ணம் வைக்கவேண்டும்.
  • பூஜை அறைக்கு மேல் loft கண்டிப்பாக இருக்கக்கூடாது.
  • பூஜை அறையில் கசங்கிய பூக்கள் இருக்கக்கூடாது.
  • தலைவாசல் முன் காலில் அணியும் செருப்புகளை விடக்கூடாது.
  • கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருக்கும்போது, அந்த படுக்கை அறையில் டிவி இருந்தால், இரவு தூங்கும் போது டிவியை நிறுத்திவிட்டு, வெள்ளைக் காட்டன் துணியால் டிவி ஸ்க்ரீனை மூடி வைக்க வேண்டும்.
  • இதே போல் படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால் அதையும் வெள்ளைக் காட்டன் துணியால் மூடி வைக்க வேண்டும்.
  • electro magnetic waves அது டிவியில் இருந்து வரும். அது போல ஏ.சி அறையில் பயன்படுத்தும்போது கதவுகளையும், ஜன்னல்களையும் மூடிவிடுவார்கள். அப்போது அந்த ரேடியசன் பலமடங்கு அதிகரிக்கும். இதனால் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

About ASTROSIVA

Leave a reply