Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

ஜோதிடத்தில் ஆண்  ராசி ,பெண்ராசி என்றால் என்ன ?

ஜோதிடத்தில் ஆண் ராசி ,பெண்ராசி என்றால் என்ன ?

ஆண், பெண் ராசிகள்

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப்படும்.

ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண் ராசிகள் எனப்படும்.

ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம். உதாரணமாக ,மேஷ இலக்கினத்தில் ஒரு பெண் பிறந்து இருப்பாரேயாகில் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது முன் கோபமும் முரட்டுத்தன்மை உடையவராக இருப்பார் எனக் கொள்ளலாம்.

அதேபோல் ஒரு பெண்ரசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது பயந்த சுபாவம் உள்ளவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார் எனக் கொள்ளலாம்.

ஆண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் ஆண் சந்ததியையும், பெண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசா, புக்தி காலங்களில் பெண்சந்ததியையும் கொடுக்கும்.

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணாவென்று அறிய இந்த ராசிகள் பயன் படும். ஒருவர் ஜாதகத்தில் 5-ம் வீடு ஆண்ராசியாகி, 5-க்குடையவர் ஆண்கிரகமாக இருந்து அவரும் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சந்ததிகள் அதிகம் இருக்கும் என்று கூறலாம்.

5-ம் வீடு பெண்ராசியாகி, 5-க்குடையவர் பெண் கிரகமாகி அவர் பெண் ராசியில் இருப்பாரேயகில் அவருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம்.

About ASTROSIVA

Leave a reply